இந்த வளர்ச்சியைப் பற்றி Ola Electric தரப்பில், “Roadster X+க்கு அரசு சான்றிதழ் கிடைத்துள்ளது, இந்தியாவில் முழுமையான EV தொழில்நுட்பத்தை உருவாக்குவது எங்கள் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்” எனத் தெரிவித்துள்ளது. மேலும், “இந்த மாடல் மூலம், அதிக தூரம் செல்லும், சிறந்த செயல்திறன், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை, எங்கள் சொந்த செல்கள் மற்றும் பேட்டரி தொழில்நுட்பத்தின் மூலம் வழங்குகிறோம்.
இந்தச் சான்றிதழ், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) அறிவித்த விதிகளின் அடிப்படையில் கடுமையான பாதுகாப்பு, மின்சாரம், செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழல் சோதனைகளுக்குப் பிறகு வழங்கப்படுகிறது. இதில் பிரேக்கிங் செயல்திறன், சத்தம், எலக்ட்ரோமேக்னாடிக் இணக்கம், ரெஞ்ச் உள்ளிட்ட பல சோதனைகள் இடம்பெற்றன. இதற்கு மேலாக, 9.1 kWh பேட்டரி பேக், ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI) வழங்கும் AIS-156 திருத்தம் 4 சான்றிதழையும் பெற்றுள்ளது. நீரில் மூழ்கடிப்பு, தீ பாதுகாப்பு, வெப்பம், அதிர்வு போன்ற கடுமையான சோதனைகளில் வெற்றி பெறுவது, பேட்டரி பாதுகாப்பில் Ola Electric அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.