கேபினுக்குள் நுழைந்தவுடன் எதிர்காலத் தோற்றம் வெளிப்படும் வகையில் உயர்தர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 4,915 மிமீ நீளம், 2,820 மிமீ வீல்பேஸ் இது ரெனால்ட்டின் மிக நீளமான மாடலாகவும் சொல்லப்படுகிறது. பயணிகளுக்காக 320 மிமீ பின்புற லெக்ரூம், 654 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்ஃபோடெயின்மென்ட், பயணிகள் டிஸ்ப்ளே என மூன்று 12.3-இன்ச் டிஜிட்டல் ஸ்கிரீன்கள், ஓட்டுநருக்காக 25.6-இன்ச் AR ஹெட்-அப் டிஸ்ப்ளே ஆகியவை பெரிய ஹைலைட்டாக உள்ளன.
பவர்டிரெய்னில், ஃபிலாண்டே ஜீலி CMA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இதில் E-Tech 250 ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டது, 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 2 எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 1.64 kWh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. 3-ஸ்பீட் DHT Pro ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வரும் இந்த எஸ்யூவி 247 hp பவர் மற்றும் 565 Nm டார்க் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவின் புசான் ஆலையில் தயாராகும் ஃபிலாண்டே, மார்ச் 2026-ல் லாஞ்ச் செய்யப்படலாம். ஆனால் தற்போது இந்திய சந்தைக்கு வர திட்டமில்லை என கூறப்படுகிறது.