1,750 ஏக்கரில் மாருதியின் மெகா பேக்டரி ரெடி! வருடம் 10 லட்சம் கார்கள் தயாரிப்பு.. எந்த மாநிலம் தெரியுமா?

Published : Jan 18, 2026, 08:56 AM IST

மாருதி சுசுகி இந்தியா லிமிடெட், ரூ.35,000 கோடி முதலீட்டில் புதிய வாகன உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இந்தத் திட்டம் மூலம் 12,000-க்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும்.

PREV
12
மாருதி சுசுகி புதிய ஆலை

மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் குஜராத்தின் கோராஜ் பகுதியில் புதிய வாகன உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. குஜராத் தொழில் வளர்ச்சிக் கழகம் (GIDC) வழங்கிய 1,750 ஏக்கர் நிலத்தில் இந்த ஆலை உருவாகும். இந்த நிறுவனம் ரூ.35,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் முதல்வர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, காந்திநகரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பூபேந்திர படேல் முன்னிலையில் முதலீட்டுக் கடிதம் ஒப்படைக்கப்பட்டது. இதில் மாருதி சுசுகியின் நிர்வாக இயக்குநர் ஹிசாஷி டேக்யூச்சி, துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி, நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் சுனில் கக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தின் மூலம் நேரடியாக 12,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் துணை யூனிட்கள், குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் (MSME) உருவாகும் வாய்ப்பு அதிகம். இதன் மூலம் 7.50 லட்சத்திற்கும் அதிகமான மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.

22
கோராஜ் மாருதி உற்பத்தி ஆலை

புதிய ஆலையின் உற்பத்தி திட்டமும் பெரியதாக உள்ளது. தலா 2.5 லட்சம் கார்கள் உற்பத்தி திறன் கொண்ட 4 உற்பத்தி யூனிட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆண்டுக்கு மொத்தம் 10 லட்சம் கார்கள் தயாரிக்கும் திறன் உருவாகும். முதல் ஆலையில் 2029 நிதியாண்டில் இருந்து உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டை வரவேற்ற முதல்வர் பூபேந்திர படேல், இது ஒரு சாதாரண ஆலை மட்டுமல்ல, இந்தியாவின் போட்டித்தன்மை கொண்ட ஆட்டோமொபைல் உற்பத்தி வழித்தடத்தை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றம் என்றார். பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா, மேட் ஃபார் தி வேர்ல்ட்’ பார்வைக்கு ஏற்ப குஜராத் தொடர்ந்து வளர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மாருதி சுசுகி நிர்வாக இயக்குநர் டேக்யூச்சி, குஜராத் வாகனத் துறையில் முன்னணியாக உருவெடுத்து வருவதைப் பாராட்டினார். வைப்ரன்ட் குஜராத் சம்மிட் 2024-ல் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே ஹன்சல்பூரில் செயல்படும் மாருதி ஆலை ஆண்டுக்கு 7.50 லட்சம் கார்கள் உற்பத்தி செய்து வருவதுடன், 2026-27 நிதியாண்டில் அதை 10 லட்சம் யூனிட்கள் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories