பெட்ரோல் விலை குறைய உள்ளது!
நாடு முழுவதும் பெட்ரோல் விலை குறைப்பு தொடர்பாக மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதி கட்கரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எத்தனால் கலந்த பெட்ரோல் விரைவில்
எத்தனால் கலந்த பெட்ரோல் நாடு முழுவதும் கிடைக்கும், இதனால் பெட்ரோல் விலையில் கணிசமான குறைவு ஏற்படும். இந்த பெட்ரோல் விரைவில் பெட்ரோல் பங்குகளில் கிடைக்கும். இதன் விலை ரூ.20 குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனால் கார்கள் விரைவில்
டொயோட்டா ஏற்கனவே எத்தனால் மூலம் இயங்கும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் எரிபொருள் செலவு லிட்டருக்கு ரூ.25 மட்டுமே. மேலும் பல எத்தனால் மூலம் இயங்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்தார்.
ஃப்ளெக்ஸ் எரிபொருள் - மாற்று எரிபொருள்
ஃப்ளெக்ஸ் எரிபொருள் என்பது மாற்று எரிபொருள். இது எத்தனால் அல்லது மெத்தனாலை பெட்ரோலுடன் கலப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது பெட்ரோல் செலவைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2030 இலக்கு - எத்தனால் கலப்பு
2030 ஆம் ஆண்டிற்குள் 20% எத்தனாலை பெட்ரோலுடன் கலப்பதே இலக்கு, இது பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை கணிசமாகக் குறைக்கும்.