பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்திய பெண்களுக்கு ஆதார் கார்டு அடிப்படையில் இலவச ஸ்கூட்டர் வழங்குவதாக கூறும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. இதுகுறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சமூக வலைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு ஆதார் கார்டு அடிப்படையில் இலவச ஸ்கூட்டர் வழங்குவதாக கூறும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அரசு புதிய நலத்திட்டம் அறிவித்ததாக கூறப்படுகின்றது. ஆனால் இந்த தகவல் உண்மையா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.
24
மத்திய அரசு விளக்கம்
இந்த விவகாரம் குறித்து பிஐபி (PIB) அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிட்டுள்ளது.அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதாகவும், மத்திய அரசு இத்தகைய எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
34
அரசு திட்டம் குறித்து முக்கிய எச்சரிக்கை
அரசு நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ தளமான MyScheme-ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்கள் மற்றும் செய்திகளை சரிபார்க்காமல் நம்ப வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பம் மூலம் அரசியல் தலைவர்களின் குரல் மற்றும் முகத்தைப் போலியாக உருவாக்குவது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இதனால் தவறான தகவல்கள் விரைவாக பரவி மக்களை தவறாக வழிநடத்தும் அபாயம் உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லாமல் வரும் சலுகை தகவல்களை நம்பாமல் விழிப்புடன் இருப்பதே பாதுகாப்பான நடைமுறையாகும்.