பெட்ரோல் செலவுக்கு குட்பை..! ரூ.8 லட்சத்தில் ஆரம்பம்.. டாப் 5 எலக்ட்ரிக் கார்கள் இதோ!

Published : Feb 12, 2026, 01:59 PM IST

Top Range Electric Cars: இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. குறைந்த பராமரிப்புச் செலவு மற்றும் கட்டுப்படியான விலை காரணமாக சாதாரண மக்களிடையே இவற்றுக்கு வரவேற்பு கூடிவருகிறது.  

PREV
16
கார் விற்பனை அமோகம்

நாட்டில் கார் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை அடைகிறது. பெட்ரோல், டீசல் கார்கள் அதிகளவில் விற்கப்பட்டாலும், எலக்ட்ரிக் கார்களின் விற்பனையும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் ஆண்டுகளில் பெட்ரோல் கார்களின் பயன்பாடு குறைந்து, எலக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. மலிவு விலை, எளிதான கையாளுதல், குறைந்த பராமரிப்புச் செலவு ஆகியவை முக்கிய காரணங்கள்.

டாடா பஞ்ச் இவி, டாடா டியாகோ இவி, டாடா நெக்ஸான் இவி, எம்ஜி காமெட் இவி மற்றும் சிட்ரோன் இசி3 ஆகியவை பிரபலமான எலக்ட்ரிக் கார்கள். இவை விலை குறைந்தது மட்டுமல்ல, தினசரி நகரப் பயன்பாட்டிற்கும் ஏற்றவை.

26
டாடா டியாகோ EV

டாடா டியாகோ இவி 19.2 kWh மற்றும் 24 kWh பேட்டரி பேக்குகளைக் கொண்டுள்ளது. இது 293 கிமீ வரை பயணிக்கக்கூடியது. தற்போது இதன் விலை ரூ.7.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

36
டாடா பஞ்ச் EV

டாடா பஞ்ச் இவி 25kWh, 35kWh பேட்டரி பேக்குகளில் கிடைக்கிறது. 365 கிமீ ரேஞ்ச் தருகிறது. விசாலமான கேபின், நவீன வசதிகள் உள்ளன. இதன் விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

46
எம்ஜி காமெட்

எம்ஜி காமெட் இவி 17.3 kWh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 230 கிமீ வரை பயணிக்கக்கூடியது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.99 லட்சத்தில் தொடங்குகிறது. 56.3 பிஎச்பி பவர், 110 என்எம் டார்க் வெளியிடுகிறது.

56
டாடா நெக்ஸான் EV

டாடா நெக்ஸான் இவி 30 kWh மற்றும் 45 kWh என இரண்டு பேட்டரி பேக்குகளைக் கொண்டுள்ளது. இது 489 கிமீ வரை பயணிக்கக்கூடியது. இதன் விலை ரூ.12.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

66
சிட்ரோயன் EC3

சிட்ரோன் இசி3-ன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.90 லட்சம். 29.2 kWh பேட்டரி மூலம் 246 கிமீ பயணிக்கலாம். 6.8 வினாடிகளில் 0-60 கிமீ வேகத்தை எட்டும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 107 கிமீ ஆகும்.

Read more Photos on
click me!

Recommended Stories