சுசூகி நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான இ-அக்சஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 95 கிமீ ரேஞ்ச், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் TFT டிஸ்ப்ளே போன்ற நவீன அம்சங்களுடன் வருகிறது.
சுசூகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. சுசூகி இ-அக்சஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.88 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9, 2026 அன்று அறிமுகமான இந்த மாடலுக்கான முன்பதிவு நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட சுசூகி ஷோரூம்களில் தொடங்கியுள்ளது. விரைவில் விற்பனை ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
25
இ-அக்சஸ் அம்சங்கள்
வடிவமைப்பில், சுசூகி e-Access நவீனமும் எளிமையும் கலந்த தோற்றத்தை பெற்றுள்ளது. முன்புறத்தில் செங்குத்தாக அமைந்த LED டே-டைம் ரன்னிங் லைட்களும், சதுர வடிவ LED ஹெட்லாம்பும் இடம்பெற்றுள்ளன. டர்பைன் ஸ்டைல் அலாய் வீல்கள் மற்றும் உயர்த்திய சுசூகி லோகோ ஆகியவை இதன் தோற்றத்தை மேம்படுத்துகின்றன. இந்த ஸ்கூட்டர் நான்கு டூயல்-டோன் நிறங்களில் கிடைக்கிறது.
35
95 கி.மீ ரேஞ்ச் ஸ்கூட்டர்
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 கிலோவாட் மணி திறன் கொண்ட LFP பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், சுமார் 95 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவிக்கிறது. இதனுடன் 4.1 கிலோவாட் மின்மோட்டார் இணைக்கப்பட்டு, 15 Nm டார்க் வழங்குகிறது. குறைந்த பேட்டரி நிலையிலும் ஸ்கூட்டர் மென்மையாக இயங்கும் வகையில் உள்ளது.
சார்ஜிங் வசதிகளில், சாதாரண சார்ஜர் பேட்டரி மூலம் முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 6 மணி 42 நிமிடங்கள் ஆகும். டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைப் பயன்படுத்தினால், சுமார் 2 மணி 12 நிமிடங்களில் சார்ஜ் முடியும். வீட்டிலும் பொது சார்ஜிங் நிலையங்களிலும் சார்ஜ் செய்யும் வசதி உள்ளது.
55
இ-அக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்புகள்
மேலும் 4.2 இன்ச் TFT கலர் டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நெவிகேஷன், மூன்று ரைடு மோடுகள், ரிவர்ஸ் மோடு மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், 7 ஆண்டுகள் அல்லது 80,000 கி.மீ வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு 60% வரை பை-பேக் உத்தரவாதம் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன.