அடிமட்ட ரேட்டில் அதிக மைலேஜ் கொடுக்கும் புதிய ஹோண்டா பைக்.. விலை இவ்வளவுதானா!

Published : Feb 03, 2026, 09:50 AM IST

ஹோண்டா நிறுவனம் தற்போது ஷைன் 125 லிமிடெட் எடிஷன் பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் புதிய நிறம், மைலேஜ் விவரம், விலை, அம்சங்கள் மற்றும் வெளியீட்டு அப்டேட்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

PREV
15
ஹோண்டா ஷைன் 125 லிமிடெட் எடிஷன்

இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஹோண்டா தனது பிரபல கம்யூட்டர் பைக்கான Shine 125-ன் புதிய Limited Edition மாடலை அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது. வணிக ரீதியான வெளியீட்டிற்கு முன்பே இந்த மாடல் அறிமுகமாகியிருப்பது பைக் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புதிய லிமிடெட் எடிஷன், தற்போதுள்ள Shine 125 டிஸ்க் பிரேக் வேரியண்டை கொண்டு, வெளிப்புற வடிவமைப்பில் சில முக்கிய மாற்றங்களுடன் வழங்கப்படுகிறது.

25
ஹோண்டா ஷைன் 125 அம்சங்கள்

புதிய ஹோண்டா ஷைன் 125 லிமிடெட் எடிஷனின் முக்கிய சிறப்பம்சமாக Pearl Siren Blue நிறம் இடம் பெற்றுள்ளது. இதனுடன் புதுப்பிக்கப்பட்ட டேங்க் கிராஃபிக்ஸ், குரோம் ஃப்ரண்ட் வைசர், ஸ்டைலிஷ் சைடு கவர்ஸ் மற்றும் பைரைட் பிரவுன் நிற அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை வழக்கமான ஷைன் 125 மாடலில் கிடைக்கும் ஆறு நிறங்களிலிருந்து இந்த லிமிடெட் எடிஷனை தனித்துவமாக காட்டுகின்றன.

35
புதிய ஹோண்டா பைக்

எஞ்சின் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் BS6 விதிமுறைக்கு உட்பட்ட 123.94cc, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சுமார் 10.8 PS பவர் மற்றும் 11 Nm டார்க் வழங்குகிறது. 5-ஸ்பீட் கியர்பாக்ஸ், முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக், டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ், டூயல் ரியர் ஷாக்ஸ் ஆகியவை முந்தைய மாடல் போலவே தொடர்கின்றன.

45
ஹோண்டா ஷைன் 125 வசதிகள்

மேலும், LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஐட்லிங் ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டம், சைலண்ட் ஸ்டார்டர் மற்றும் USB Type-C சார்ஜிங் போர்ட் போன்ற வசதிகளும் இதில் வழங்கப்படுகின்றன. இவை Shine 125-ன் முந்தைய அப்டேட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்சங்களாகும். இந்த லிமிடெட் எடிஷன் மாடலுக்கான அதிகாரப்பூர்வ விலை மற்றும் வெளியீட்டு தேதி குறித்து Honda Motorcycle & Scooter India இந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

55
ஹோண்டா ஷைன் 125 விலை

இருப்பினும், டெல்லியில் ரூ.85,211 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கும் டிஸ்க் வேரியண்டை விட சற்றே அதிக விலையில் இது அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெக்கானிக்கல் மாற்றமின்றி, தோற்றத்தில் மட்டும் புதுப்பிப்பு செய்வதன் மூலம் மாடலுக்கு புதிய கவனம் ஈர்ப்பதே இந்த லிமிடெட் எடிஷன் அறிமுகத்தின் நோக்கமாக பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories