கிராமம் முதல் ஹைவே வரை.. பெட்ரோல் செலவை குறைக்கும் டாடாவின் சிறந்த மைலேஜ் கார் இதுதான்

Published : Feb 02, 2026, 08:26 AM IST

டாடா ஆல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக், மைலேஜ் விஷயத்தில் இந்திய கார் வாங்குபவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த கார் நகரம் மற்றும் நெடுஞ்சாலையில் வெவ்வேறு மைலேஜ் அளவுகளை தருகிறது. இதன் விலை, சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.

PREV
15
டாடாவின் மைலேஜ் கார்

இன்றைய எரிபொருள் விலையைப் பார்த்தால், கார் வாங்கும்போது முதல் கேள்வி “மைலேஜ் எவ்வளவு?” என்பதுதான். அந்த வகையில் டாடா ஆல்ட்ராஸ் ஹேட்ச்பேக் பற்றி “35 கிமீ வரை மைலேஜ் கிடைக்கிறது” என்ற தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. இது விளம்பரத்தில் சொல்லப்படும் கணக்கல்ல. உண்மையில் ஆல்ட்ராஸ் ஓட்டி வரும் பயனாளர்கள் பகிர்ந்த அனுபவங்களின் அடிப்படையில் கிடைத்த தகவல்கள்தான் இவை.

25
டாடா ஆல்ட்ராஸ்

கார் மைலேஜ் என்பது ஒரே மாதிரி இருக்கும் விஷயம் அல்ல. நகரத்தில் நிற்கும் போக்குவரத்து, சிக்னல் ஓட்டம், நெடுஞ்சாலையில் தொடர்ச்சியான பயணம், ஓட்டுநரின் பழக்கம், வாகன பராமரிப்பு என பல காரணிகள் இதில் தாக்கம் செலுத்தும். அதனால் “எனக்கும் அதே மைலேஜ் கிடைக்குமா?” என்று கேட்பதைவிட, சராசரியாக ஆல்ட்ராஸ் எந்த அளவுக்கு எரிபொருளை சேமிக்கிறது என்பதைக் கவனிப்பதே சரியான அணுகுமுறை.

35
டாடா ஆல்ட்ராஸ் அம்சங்கள்

இந்த காரின் முக்கிய பலம், இன்ஜின் தேர்வுகள்தான். இந்திய சந்தையில் ஆல்ட்ராஸ் பெட்ரோல், டீசல், CNG என மூன்று வகைகளில் கிடைக்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் CNG உடன் வரும் பெட்ரோல் இன்ஜின் என பயனாளரின் தேவைக்கேற்ப தேர்வு செய்யலாம். பெட்ரோல் மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வசதியும் இருப்பது கூடுதல் பிளஸ்.

45
டாடா ஆல்ட்ராஸ் மைலேஜ்

நடைமுறை ஓட்ட அனுபவங்களில், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் ஆல்ட்ராஸ் நகரில் சுமார் 9-11 கிமீ வரை, நெடுஞ்சாலையில் 17-19 கிமீ வரை தருவதாக கூறப்படுகிறது. டீசல் மாடல் நகரத்தில் 14–16 கிமீ, ஹைவேயில் 20 கிமீக்கு அருகில் செல்வதாக பயனாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையான சேமிப்பு வேண்டும் என்றால், CNG மாடல் தான் அதிக கவனம் பெறுகிறது. நகரத்தில் கிலோவுக்கு 20 கிமீ வரை, நெடுஞ்சாலையில் 35 கிமீ வரை கிடைப்பதாக அனுபவங்கள் கூறுகின்றன.

55
ஆல்ட்ராஸ் நெடுஞ்சாலை மைலேஜ்

விலை, வேரியன்ட், பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் சேர்த்து பார்த்தால், ஆல்ட்ராஸ் ஒரு “மைலேஜ் மட்டும்” கார் அல்ல. குடும்பப் பயன்பாடு, தினசரி பயணம், நீண்ட தூர ஓட்டம் என அனைத்துக்கும் சமநிலையான தேர்வாக இது மாறியுள்ளது. குறைந்த எரிபொருள் செலவில் நம்பகமான ஹேட்ச்பேக் தேடுபவர்களுக்கு, ஆல்ட்ராஸ் ஒரு கவனிக்க வேண்டிய பெயராக மாறிக் கொண்டிருக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories