ரூ.21,000 போதும்! புதிய டஸ்டர் புக்கிங் ஓபன் ஆயிடுச்சு.. கூட்டம் குவியுது

Published : Jan 29, 2026, 01:23 PM IST

ரெனால்ட் தனது புதிய தலைமுறை டஸ்டரை 2026 மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.8 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் உள்ளிட்ட பல இன்ஜின் தேர்வுகளுடன் இது எஸ்யூவி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

PREV
12

புதிய தலைமுறை டஸ்டர் மூலம் இந்திய சந்தையில் மீண்டும் கவனம் ஈர்க்க தயாராக உள்ளது ரெனால்ட். 2026 மார்ச் மாதம் முதல் இந்த எஸ்யூவி இந்திய சாலைகளில் ஓடத் தொடங்கும் என்ற தகவல். ஆர்வமுள்ளவர்கள் ரூ.21,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். டர்போ பெட்ரோல் மாடல்களின் டெலிவரி ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய டஸ்டரை விட புதிய மாடல் வெளிப்புறத்தில் அதிக திடத்தன்மை மற்றும் மாடர்ன் லுக் பெறுகிறது. பெரிய கிரில், தசைபோன்ற டிசைன் லைன்கள், உயரமான நிலை ஆகியவை இதை பிரீமியம் எஸ்யூவியாகக் காட்டுகின்றன.

உள்ளக அமைப்பிலும் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விசாலமான கேபின், தரமான மெட்டீரியல், பயணிகளுக்கு சுகமான இடவசதி ஆகியவை கவனம் ஈர்க்கும். 700 லிட்டர் வரை பூட் ஸ்பேஸ் வழங்கப்படுவது குடும்ப பயணங்களுக்கு உதவும். தினசரி பயன்பாட்டிற்கு பல சிறிய ஸ்டோரேஜ் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. டிரைவர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் திரை தூரம் கூட எளிதான அணுகலை தரும் வகையில் உள்ளது.

22

டெக்னாலஜி அம்சங்களில் இந்த டஸ்டர் முன்னிலையில் உள்ளது. 48 நிற ஆம்பியன்ட் லைட்டிங், பல டிரைவ் மோடுகள், கூகுள் பில்ட்-இன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை புதிய அனுபவத்தைத் தரும். வாகன ஸ்டெபிலிட்டி மற்றும் ஹாண்ட்லிங்கையும் மேம்படுத்தியுள்ளனர். மேலும், பல்வேறு ஆக்சசரிகள் மூலம் கஸ்டமைஸ் செய்யும் வாய்ப்பு உள்ளது. 7 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கிமீ வரை வாரண்டி வழங்கப்படுகிறது.

இன்ஜின் தேர்வுகளிலும் பல விருப்பங்கள் உள்ளன. 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் நல்ல பவர் மற்றும் டார்க் வழங்குகிறது; மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் இரண்டும் கிடைக்கும். கூடுதலாக, 1.8 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் அமைப்பு வருவது பெரிய ஹைலைட். இது எலக்ட்ரிக் உதவியுடன் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை தரும். குறைந்த பட்ஜெட்டிற்காக 1.0 லிட்டர் டர்போ விருப்பமும் வழங்கப்படுகிறது. மொத்தத்தில், 2026 டஸ்டர் சக்தி, வசதி, தொழில்நுட்பம் மூன்றையும் சமநிலைப்படுத்தும் எஸ்யூவியாக வரவிருக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories