ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் இப்போது 100kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது ஒரு மென்பொருள் அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட்டால், 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 39 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
எலக்ட்ரிக் நான்கு சக்கர வாகன சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் வசதியை மேலும் அதிகரிக்கும் வகையில், ஹூண்டாய் நிறுவனம் ஒரு முக்கிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி 100kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன் மூலம், பொது ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களில் சார்ஜ் செய்யும் நேரம் குறைந்துள்ளது. முன்னதாக 50kW சார்ஜிங் மட்டுமே இருந்ததால், 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆக சுமார் 58 நிமிடங்கள் தேவைப்பட்டது. தற்போது இந்த அப்டேட்டுக்குப் பிறகு, அதே அளவு சார்ஜ் பெற வெறும் 39 நிமிடங்கள் போதுமானதாக உள்ளது.
24
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த புதிய சார்ஜிங் வசதி எந்த ஹார்ட்வேர் மாற்றமும் இல்லாமல் வழங்கப்படுகிறது. மென்பொருள் அப்டேட் மூலமாகவே இந்த வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. கிரெட்டா எலக்ட்ரிக் உரிமையாளர்களுக்கு இந்த அப்டேட் ஓவர்-தி-ஏர் (OTA) முறையில் கிடைக்கும் என்பதால், சர்வீஸ் சென்டருக்குச் செல்ல வேண்டும் அவசியம் இல்லை. ஒரே சார்ஜில் அதிகபட்சமாக 510 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்பதும் இந்த காரின் சிறப்பாகும். 42kWh பேட்டரி வேரியண்ட் ரூ.18.02 லட்சம் முதல் ரூ.22.33 லட்சம் வரை விலையில் கிடைக்கிறது. லாங் ரேஞ்ச் வேரியண்ட் ரூ.20 லட்சம் முதல் ரூ.23.96 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
34
கிரெட்டா எலக்ட்ரிக் ரேஞ்ச்
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் வருகிறது. 42kWh பேட்டரி 420 கி.மீ. ரேஞ்சையும், 51.4kWh பேட்டரி 510 கி.மீ. ரெஞ்சையும் வழங்குகிறது. லாங் ரெஞ்ச் வேரியண்ட் வெறும் 7.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ./மணி வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இதில் எக்கோ, நார்மல், ஸ்போர்ட் என மூன்று டிரைவ் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. சிங்கிள் பெடல் டிரைவிங்கிற்காக ஐ-பெடல் தொழில்நுட்பமும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த எஸ்யூவி எக்ஸிகியூட்டிவ், ஸ்மார்ட், பிரீமியம் மற்றும் எக்ஸலன்ஸ் என 4 வேரியண்ட்களில் கிடைக்கிறது.
அம்சங்களைப் பொறுத்தவரை, இதில் 10.25 இன்ச் அளவுள்ள இரண்டு பெரிய ஸ்கிரீன்கள், புதிய ஃப்ளோட்டிங் சென்ட்ரல் கன்சோல், 360 கேமரா டிகிரி, ADAS பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் உள்ளன. மேலும், ஒரு எலக்ட்ரிக் வாகனத்திலிருந்து மற்றொரு வாகனத்தை சார்ஜ் செய்ய V2V தொழில்நுட்பமும் இதில் வழங்கப்படுகிறது. நிறங்களை விரும்புபவர்களுக்கு 8 மோனோடோன், 3 மேட் ஃபினிஷ் மற்றும் டூயல்-டோன் விருப்பங்கள் உட்பட மொத்தம் 10 வண்ண ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இந்த அப்டேட்டுடன், கிரெட்டா எலக்ட்ரிக் தினசரி பயணத்துக்கும், நீண்ட பயணங்களுக்கும் இன்னும் பயனுள்ளதாக மாறியுள்ளது.