கியூஆர் கோடு, ஃபேஸ் அன்லாக், ஆஃப்லைன் மோடு.. புதிய ஆதார் செயலியின் சிறப்பம்சங்கள்!

Published : Nov 11, 2025, 01:19 PM IST

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி, மல்டி-ப்ரோஃபைல் மேனேஜ்மென்ட், பயோமெட்ரிக் பாதுகாப்பு லாக், மற்றும் ஆஃப்லைன் மோடு போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் வருகிறது.

PREV
14
புதிய வடிவில் ஆதார் செயலி அறிமுகம்

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்காக புதிய “ஆதார் செயலி”யை அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய mAadhaar பயன்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த புதிய செயலி, பயனர்களின் ஆதார் தகவல்கள் எளிதாக அணுக, பகிர, மற்றும் பாதுகாப்பாக நிர்வகிக்க உதவுகிறது. பௌதீக ஆதார் அட்டை எடுத்து செல்ல வேண்டிய அவசியமின்றி, உங்கள் ஸ்மார்ட்போனில் டிஜிட்டல் ஆதார் நகரை காணலாம். இந்த செயலியை Google Play Store மற்றும் Apple App Store வழியாக இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

24
முக்கிய அம்சங்கள் மற்றும் புதிய வசதிகள்

புதிய ஆதார் செயலியில் பல பயனுள்ள அம்சங்கள் உள்ளன. “மல்டி-ப்ரோஃபைல் மேனேஜ்மென்ட்” அம்சத்தின் மூலம் ஒரே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஐந்து ஆதார் அட்டைகள் வரை ஒரே செயலியில் சேர்க்க முடியும் – இது குடும்ப ஆதார் நிர்வாகத்தை எளிதாக்குகிறது. மேலும், “பயோமெட்ரிக் செக்யூரிட்டி லாக்” மூலம் ஆதார் தகவல்கள் முழுமையாக பாதுகாக்கப்படும். பயோமெட்ரிக் அல்லது ஃபேஸ் அன்லாக் இல்லாமல் மற்றொருவர் தகவல்களை அணுக முடியாது.

34
தனியுரிமை, கியூஆர் மற்றும் ஆஃப்லைன் வசதி

பயனர்கள் தாங்களே எந்த தகவல்களை பகிர வேண்டும் என்பதை “செலக்டிவ் டேட்டா ஷெரிங்” வசதியின் மூலம் கட்டுப்படுத்தலாம். உதாரணமாக, பெயர் மற்றும் புகைப்படம் மட்டும் பிறந்த தேதி, முகவரி போன்றவற்றை மறைக்க முடியும். அதேசமயம், “கியூஆர் கோடு விருப்பம்” மூலம் வங்கிகள் அல்லது அரசு அலுவலகங்களில் ஆதார் விவரங்களை காகிதமின்றி, வேகமாக சரிபார்க்கலாம். மேலும், ஆஃப்லைன் மோடு வசதியின் மூலம் இணையம் இல்லாத நேரத்திலும் சேமிக்கப்பட்ட ஆதார் தகவல்களைப் பார்க்கலாம்.

44
பயன்பாடு மற்றும் பாதுகாப்பு

செயலியை நிறுவிய பின், உங்கள் மொழியைத் தேர்ந்தெடுத்து 12 இலக்க ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். OTP மூலம் சரிபார்த்தபின், ஃபேஸ் ஐடி அங்கீகாரம் மற்றும் 6 இலக்க பாதுகாப்பு PIN அமைத்து செயலியைப் பயன்படுத்தலாம். மேலும், செயலியின் ஆக்டிவிட்டி லாக் மூலம் உங்கள் ஆதார் தகவல்கள் எப்போது பகிரப்பட்டன என்பதை அறியலாம். இதன் மூலம், ஆதார் பாதுகாப்பு, தனியுரிமை, மற்றும் சுலப அணுகல் ஆகிய மூன்றையும் UIDAI ஒரே செயலியில் இணைத்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories