குடும்பங்கள் கொண்டாடும் 7 சீட்டர் கார்.. ரூ.8.80 லட்சம் முதல்.. மஹிந்திரா, ஸ்கார்பியோவுக்கு சவால் விடும் கார்

Published : Nov 11, 2025, 12:54 PM IST

2025 அக்டோபர் மாத விற்பனையில், இந்த 7-சீட்டர் கார் பிரிவில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த அம்சங்கள், அதிக மைலேஜ், மற்றும் நம்பகமான விலை ஆகியவற்றால், இது இந்திய குடும்பங்களின் விருப்பமான தேர்வாக விளங்குகிறது.

PREV
15
அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் கார்

2025 அக்டோபர் மாதத்திற்கான விற்பனைத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 7-சீட்டர் கார் பிரிவில் மாருதி சுசுகி எர்டிகா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த மாதம் எர்டிகா மொத்தம் 20,087 யூனிட்கள் விற்பனையாகி, ஆண்டுக்கு 6.93% வளர்ச்சி கண்டுள்ளது. இது மட்டும் அல்லாமல், இந்தியாவில் அதிகம் விற்பனையான மூன்றாவது சிறந்த கார் என்ற பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. இது மாருதியின் நம்பகத்தன்மையையும், குடும்ப கார் பிரிவில் அந்த பிரபலத்தையும் மேலும் உறுதிப்படுத்துகிறது.

25
மாருதி சுசுகி எர்டிகா

2025 அக்டோபர் மாத விற்பனையில் முன்னணியில் உள்ள 10 சிறந்த கார்களில், 7-சீட்டர் பிரிவிலிருந்து இரண்டு மாடல்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன. அவை மாருதி எர்டிகா மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ. எர்டிகா 20,087 யூனிட்களுடன் முதல் இடத்தில், ஸ்கார்பியோ 17,880 யூனிட்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இது இந்திய குடும்பங்களில் உள்ள பெரிய கார்களுக்கு இன்னும் வலுவான தேவை இருப்பதை வெளிப்படுத்துகிறது.

35
அம்சங்களால் நிறைந்த எர்டிகா

மாருதி எர்டிகா பல புதிய வசதிகளுடன் வருகிறது. இதில் 7-இன்ச் டஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அர்காமிஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் கலர் TFT MID கிளஸ்டர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களில் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், EBD-ABS பிரேக் சிஸ்டம், பின்புற பார்க்கிங் கேமரா, சென்ட்ரல் லாக்கிங், மற்றும் சுசுகி கனெக்ட் இணைப்பு அம்சங்கள் அடங்கும்.

45
எர்டிகாவின் எஞ்சின் மற்றும் மைலேஜ்

எர்டிகா தற்போதைய 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் நெச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் கொண்டுள்ளது, இது 102 bhp சக்தி மற்றும் 136 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. அதோடு, CNG விருப்பமும் உள்ளது. மைலேஜ் தரவில், பெட்ரோல் மாடல் 20.51 கிமீ/லி, சிஎன்ஜி மாடல் 26.11 கிமீ/கிலோ வரை எரிபொருள் சிக்கனம் தருகிறது.

55
எர்டிகா விலை

மாருதி எர்டிகா விலை ரூ.8.80 லட்சம் முதல் ரூ.12.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. சமீபத்திய ஜிஎஸ்டி மாற்றங்களின் பின்னர் விலை குறைந்துள்ளதால், எர்டிகாவை வாங்க ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். வசதிகள், எரிபொருள் சிக்கனம், மற்றும் நம்பகத்தன்மை காரணமாக, எர்டிகா இந்திய குடும்பங்களின் முதன்மை தேர்வாக தொடர்ந்து திகழ்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories