ஒரே சார்ஜில் 100 கிமீ மைலேஜ்.. வீட்டிலே சார்ஜ் செய்யலாம்.. பட்ஜெட் விலை.. அசத்தும் ஹீரோ விடா VX2 Go ஸ்கூட்டர்

Published : Nov 11, 2025, 09:11 AM IST

ஹீரோ மோட்டோகார்ப் தனது விடா பிராண்டின் கீழ் புதிய VX2 Go 3.4 kWh எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் 100 கிமீ ரேஞ்ச், நீக்கக்கூடிய பேட்டரி மற்றும் பேட்டரி-as-a-Service (BaaS) போன்ற அம்சங்களுடன் வருகிறது.

PREV
15
ஹீரோ விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) தனது எலக்ட்ரிக் பிராண்டான விடா (VIDA) மூலம் புதிய மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. VIDA VX2 Go 3.4 kWh எனப்படும் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஒரே சார்ஜில் அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் திறனைக் கொண்டது. இதை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். விலை ரூ.1.02 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

25
VX2 Go மாடல் அறிமுகம்

புதிய VX2 Go 3.4 kWh மாடல், முன்னர் அறிமுகமான VX2 Go மாடலை விட மேம்பட்டது. இதில் 3.4 kWh திறன் கொண்ட இரட்டை நீக்கக்கூடிய பேட்டரி அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் பேட்டரியை எளிதாக எடுத்து வீட்டு மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யலாம். 6 கிலோவாட் மின்மோட்டார் மற்றும் 26 Nm டார்க் பவருடன், இது அதிகபட்சம் 70 கிமீ வேகத்தை அடையும். மேலும், இதில் இரண்டு ரைடிங் மோடுகள் ஆகும். அவை Eco மற்றும் Ride ஆகும். இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு தேவையான முறையில் செயல்திறன் அல்லது மைலேஜை தேர்வு செய்யலாம்.

35
ஹீரோ VIDA VX2 Go

VIDA VX2 Go 3.4 kWh மாடல் வடிவமைப்பில் பழைய VX2 வடிவைத் தக்கவைத்துள்ளது. பிளாட் ஃப்ளோர் போர்டு, விரிவான இருக்கை, மற்றும் 27.2 லிட்டர் உள் சேமிப்பு இடம் போன்ற அம்சங்களும் உள்ளன. இந்திய சாலைகளுக்கேற்ப சஸ்பென்ஷன் அமைக்கப்பட்டுள்ளதால், தனி பயணிகளுக்கும் பின்பக்க பயணிகளுக்கும் வசதியான ஓட்ட அனுபவத்தை வழங்குகிறது.

45
ஹீரோ VIDA VX2 Go விலை

பயனர்களுக்கான மிக முக்கிய நன்மையாக, ஹீரோ Battery-as-a-Service (BaaS) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் பேட்டரியை வாங்காமல், வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம். இதனால் ஆரம்ப விலை குறைவாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.BaaS இல்லாமல் ரூ.1.02 லட்சம், ஆனால் BaaS உடன் ரூ.60,000 முதல் கிடைக்கும். அதன் பிறகு, ஒரு கிலோமீட்டருக்கு ரூ.0.90 மட்டுமே செலுத்த வேண்டும்.

55
புதிய VIDA VX2 Go 3.4 kWh ஸ்கூட்டர்

இந்த புதிய VIDA VX2 Go 3.4 kWh மாடல் விற்பனை நவம்பர் 2025 முதல் நாடு முழுவதும் VIDA ஷோரூம்களில் தொடங்குகிறது. தற்போது VIDA-வின் VX2 வரிசையில் VX2 Go 2.2 kWh, VX2 Go 3.4 kWh மற்றும் VX2 Plus ஆகிய மூன்று மாடல்கள் உள்ளன. இதன் மூலம், தினசரி பயணிகள் முதல் அதிக திறனைக் காண்போர்வரை அனைவருக்கும் ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விருப்பங்களை VIDA வழங்கியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories