குறிப்பிட்ட இந்த எலக்ட்ரிக் பைக், மாதம் வெறும் ரூ.150 செலவில் பயணிக்க வழிவகுக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 187 கிமீ மைலேஜ் மற்றும் ரூ.30,000 வரை தள்ளுபடி போன்ற அம்சங்களுடன் இது இளைஞர்களைக் கவர்கிறது.
பெட்ரோல் விலை உயர்ந்து வரும் இந்த காலத்தில், ஒரு மாதம் முழுவதும் வெறும் ரூ.150 செலவில் பயணம் செய்யக்கூடிய Oben Roar எனும் எலக்ட்ரிக் பைக் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான Oben Electric இந்த பைக், நவீன வடிவமைப்புடன் இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டைலிஷ் லுக், சிறந்த மைலேஜ், சக்திவாய்ந்த மோட்டார் என அனைத்தும் சேர்ந்து இந்த பைக்கை பிரத்தியேகமாக்குகின்றன. தற்போது, ரூ.30,000 வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
24
ஒரு முறை சார்ஜ் செய்தால் 187 கிமீ
இந்த பைக்கில் 4.4 kWh LFP (Lithium Ferro Phosphate) பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 187 கிமீ வரை பயணம் செய்ய உதவுகிறது. நகரப் பயணங்களுக்கும் நீண்ட தூரப் பயணங்களுக்கும் இது பொருத்தமானது. சாதாரண வீட்டு மின் இணைப்பைப் பயன்படுத்தி 0% முதல் 80% வரை வெறும் 2 மணி நேரத்தில் சார்ஜ் செய்யலாம். அதிகபட்ச வேகம் 100 கிமீ/மணி; 0 முதல் 40 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும்.
34
குறைந்த செலவு பைக்
ஓபன் ரோர் பைக்கில் 10 கிலோவாட் (13.4 ஹெச்பி) திறன் கொண்ட மிட்-டிரைவ் மோட்டார் உள்ளது. இதன் டார்க் திறன் அதிகமாக இருப்பதால் வேகமான பிக்கப் மற்றும் மென்மையான சாலைவழி அனுபவத்தை தருகிறது. மேலும், இதில் Eco, City, Havoc என மூன்று ரைடிங் மோடுகள் உள்ளன. Eco முறையில் அதிக மைலேஜ் கிடைக்கும். Havoc முறையில் முழு சக்தியும் வெளிப்படும். அதோடு LED லைட்ஸ், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, நெவிகேஷன் போன்ற நவீன அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அம்சங்களில் முன்-பின்புற டிஸ்க் பிரேக் மற்றும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் (CBS) உள்ளது. பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 3 ஆண்டு அல்லது 50,000 கிமீ வரை வாரண்டி வழங்கப்படுகிறது. பைக்கின் ஆரம்ப விலை சுமார் ரூ.1.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). 1 கிமீக்கு சுமார் 25–35 பைசா செலவாகும் என்பதால், தினமும் 20 கிமீ பயணம் செய்தால் மாதம் வெறும் ரூ.150 செலவில் பயணம் முடியும். இதுவே ஓபன் ரோர் பைக்கின் பெரிய சிறப்பு ஆகும்.