மாருதி சுசூகி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம்கள் நவம்பர் மாதத்திற்காக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. நடுத்தர மக்களுக்கு கார் வாங்கும் கனவை எளிதாக்கும் வகையில், பல பிரீமியம் மாடல்களில் ரூ.2 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாருதி கார்களின் சலுகை
இதில் கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஃப்ராங்க்ஸ், ஜிம்னி, இக்னிஸ், பலேனோ, எக்ஸ்எல்6 மற்றும் சியாஸ் ஆகிய மாடல்கள் அடங்கும். ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் சலுகை மற்றும் கிராமப்புற தள்ளுபடிகள் என மொத்தம் பல பிரிவுகளில் சலுகைகள் கிடைக்கின்றன.