ரூ.41,999க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. 50 கிமீ மைலேஜ்.. மாதம் ரூ.2,182 மட்டுமே இஎம்ஐ

Published : Nov 07, 2025, 11:33 AM IST

EOX நிறுவனத்தின் புதிய ZUKI எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஓட்டுநர் உரிமம் தேவையில்லாமல் குறைந்த விலையில் அறிமுகமாகியுள்ளது. 50 கிமீ வரை மைலேஜ் உடன் அமேசானில் சிறப்பு தள்ளுபடியில் கிடைக்கிறது.

PREV
14
ரூ.41,999க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

மின்சார வாகனங்கள் தற்போது இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது பெற்றுள்ளன. ஓட்டுநர் உரிமம் தேவையில்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் புதியதாக EOX நிறுவனத்தின் ZUKI ஸ்கூட்டர் அறிமுகமாகியுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் 25 கிமீ/மணி என்பதால் லைசன்ஸ் அல்லது பதிவு தேவையில்லை. நிறுவனம் கூறுவதுபடி, இந்த ஸ்கூட்டர் 40 முதல் 50 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும். இதன் உடன் 48V லித்தியம் அயன் பேட்டரி மற்றும் சார்ஜர் வழங்கப்படுகிறது.

24
ZUKI ஸ்கூட்டர்

இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 4 முதல் 6 மணி நேரம் எடுக்கிறது. அதனை எளிதாக நீக்கி வீட்டிலேயே சார்ஜ் செய்யலாம். இது நீர் (IP-67) மற்றும் தீ பாதுகாப்பு வசதியுடன் வருகிறது. பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனது மின்சாரம் தானாக நிறுத்தப்படும். இதனால் மின்சார விரயம் குறையும். ஸ்கூட்டரின் மோட்டார் BLDC வகை, மேலும் நீரில் ஈரமாவதற்கும் சேதமடைவதற்கும் வாய்ப்பு இல்லை. Eco, Sports, High என மூன்று ஓட்டும் முறை (modes) உள்ளன.

34
ஓட்டுநர் உரிமம் தேவையில்லை

வெளியமைப்பு மற்றும் வசதிகளிலும் இந்த ஸ்கூட்டர் சிறப்பாக உள்ளது. முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக், டிஜிட்டல் டிஸ்ப்ளே, ட்யூப்லெஸ் டயர்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. கூடுதலாக, பார்க்கிங் மோட், ரிவர்ஸ் மோட், ஆண்டி-தீஃப் லாக், மற்றும் DLR LED லைட் போன்ற வசதிகளும் இதில் உள்ளன. இதன் எடை வெறும் 60 கிலோ மட்டுமே என்பதால், 100 கிமீக்கு சுமார் ரூ.20 செலவில் பயணம் செய்யலாம்.

44
மைலேஜ் 50 கிமீ

இப்போது முக்கிய விஷயம் இதன் விலை ஆகும். இதன் மார்க்கெட் விலை ரூ.59,999, ஆனால் அமேசானில் ரூ.44,999க்கு 25% தள்ளுபடி கிடைக்கிறது. மேலும் சில கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதனால் விலை ரூ.41,999 ஆக குறையும். EMI மூலம் வாங்கினால் மாதம் ரூ.2,182 கட்டணத்தில் கிடைக்கும். எனினும், சில பயனர்கள் தரம் குறித்து சீரான விமர்சனங்கள் அளித்துள்ளதால், வாங்குவதற்கு முன் வாடிக்கையாளர் விமர்சனங்கள் மற்றும் புகைப்படங்கள் சரிபார்த்து, நிறுவனத்துடன் தெளிவாக விசாரித்து முடிவு எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories