குழந்தைகளுக்கான எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்திய ஹீரோ.. ரேட் கம்மியா இருக்கே.. எவ்வளவு.?

Published : Nov 06, 2025, 10:21 AM IST

ஹீரோ மோட்டோகார்ப் தனது விடா பிராண்டின் கீழ் குழந்தைகளுக்கான Dirt.E K3 எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குழந்தைகளுக்கு மின்சார வாகனங்கள் குறித்த ஆரம்ப அனுபவத்தை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

PREV
14
விடா டர்ட்.இ கே3 எலக்ட்ரிக் பைக் அறிமுகம்

இந்தியாவின் பிரபல இருசக்கர வாகன நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப், தனது மின்சார வாகன பிராண்டான Vida-வின் கீழ் குழந்தைகளுக்கான புதிய எலக்ட்ரிக் பைக் Dirt.E K3-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக், இத்தாலியில் நடைபெற்ற EICMA 2025 மோட்டார் ஷோவில் உலகளாவிய அளவில் வெளியிடப்பட்டது. 4 முதல் 10 வயது குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த மின்சார டர்ட் பைக், குழந்தைகளுக்கு பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஓட்ட அனுபவத்தை வழங்குகிறது. வளர்ந்துவரும் குழந்தைகளின் உயரம் மற்றும் உடல் அமைப்பிற்கு ஏற்ப பைக்கின் அமைப்பை மாற்றிக்கொள்ளும் வகையில் இது உள்ளது.

24
விடா எலக்ட்ரிக் பைக்குகள்

Hero Vida Dirt.E K3-யில் 360Wh பேட்டரி மற்றும் சக்திவாய்ந்த எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் சுமார் 25 கிமீ/மணி ஆகும். ஸ்மார்ட்போன் செயலி மூலம் ரைடிங் மோடுகளை மாற்றும் வசதியும் இதில் உள்ளது. மேலும், பைக்கின் வீல் பேஸ் மற்றும் உயரத்தை குழந்தையின் வயது மற்றும் உயரத்திற்கேற்ப மூன்று அளவுகளில் (சிறிய, நடுத்தர, பெரிய) மாற்றலாம். இதனால் குழந்தை வளர்ச்சியுடன் பைக் பயன்பாட்டையும் நீட்டிக்க முடியும்.

34
எலக்ட்ரிக் பைக் விலை

இந்த மின்சார பைக் தற்போது இந்தியா, யூரோப் உள்ளிட்ட சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விலை பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை, ஆனால் சுமார் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே மின்சார வாகன ஓட்டத்தின் அனுபவத்தை வழங்குவது மற்றும் சுற்றுச்சூழல் நட்பு சிந்தனையை வளர்ப்பது. மேலும், இந்த பைக் பொதுச் சாலைகளுக்காக அல்ல. பாதுகாப்பான off-road அல்லது திறந்த இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

44
குழந்தைகளுக்கான எலக்ட்ரிக் பைக்

Hero Vida Dirt.E K3 வெளியீட்டின் மூலம், குழந்தைகளுக்கான மின்சார வாகனங்கள் என்ற புதிய சந்தை வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெற்றோர்கள் குழந்தைகளுக்காக பாதுகாப்பான, சூழல் நட்புகளைத் தேடுகின்ற நிலையில், இத்தகைய பைக் மிகுந்த வரவேற்பைப் பெறக்கூடும். குறைந்த உயரம், எளிய கட்டுப்பாடு, மற்றும் சிரமமற்ற சார்ஜிங் வசதியுடன், இது குழந்தைகளுக்கான “முதல் மின்சார சவாரி அனுபவம்” என சொல்லலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories