Activa 125 vs Access 125: மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்.?

Published : Nov 05, 2025, 10:34 AM IST

இந்தியாவின் பிரபலமான 125cc ஸ்கூட்டர்களான Honda Activa 125 மற்றும் Suzuki Access 125 ஆகியவற்றின் செயல்திறன், எடை, சிறப்பம்சங்கள் மற்றும் விலை ஆகியவற்றை விரிவாக பார்க்கலாம்.

PREV
14
Activa vs Access ஸ்கூட்டர்

125cc ஸ்கூட்டர் செக்மெண்ட் இந்தியாவில் மிகவும் பிரபலமானது. குறிப்பாக Honda Activa 125 மற்றும் Suzuki Access 125 அதிகம் தேடப்படும் மாடல்கள். இரண்டிலும் ஒரே ரக 124cc என்ஜின் இருந்தாலும், இவை வழங்கும் அனுபவம் வேறுபடும். Activa 125 மிருதுவாகவும் அமைதியாகவும் ஓடும்; Access 125 ஓரளவு ஸ்போர்ட்டியான செயல்திறன், வேகமான துடிப்பு கொண்டது. தினசரி பயணத்துக்கான நம்பகத்தன்மை, மைலேஜ், மெட்ரோ ரைடிங்கில் வசதி என்றால் இரண்டும் சிறந்த தேர்வுகளாக உள்ளது.

24
ஹோண்டா Activa விவரம்

பவரில் இரண்டு ஸ்கூட்டர்களும் சுமார் 8.2 bhp, 10 Nm டார்க் வழங்குகின்றன. ஆனால் என்ஜின் டியூனிங்கில் மாறுபாடு உள்ளது. ஆக்டிவா 125 மெதுவாக, ஸ்மூத் ஆக வேகம் ஏற்றும் தன்மை கொண்டது. அதிக நெரிசல் உள்ள நகரப் போக்குவரத்தில் மிருதுவாக ஓட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது சரியானது. அதேசமயம் Access 125 துரிதமாக பிக்கப் தரும். சுருக்கமான சாலைகளில் அடிக்கடி நிற்க வேண்டும், புறப்பட வேண்டும் என்றால் அல்லது சற்று ஸ்பீடி ஃபீல் வேண்டும் என்றால் Access 125 உங்களுக்கு நல்ல சாய்ஸ் ஆக இருக்கும்.

34
சுசூகி Access விவரம்

எடையில் சிறிய வித்தியாசம் தான். Access 125 சுமார் 106 கிலோ, ஆக்டிவா 125 107 கிலோ. Control மற்றும் ride balance-ல் Activa 125 சற்று மேல். ஸ்டேபிள் ரைடிங் ஃபீல் கிடைக்கும். Traffic-ல் எடை குறைவாக உணரவும், எளிதாக கைலிங் செய்யவும் விரும்பினால் Access 125. நிம்மதியான, கம்பர்டபிள் ரைடு வேண்டுமானால் Activa 125 சிறந்தது.

44
சிறந்த ஸ்கூட்டர்

Activa 125–ல் LED லைட்ஸ், சைலென்ட் ஸ்டார்ட், 4.2-inch TFT டிஸ்ப்ளே (டாப் மாடல்), Honda RoadSync ஆப் கனெக்டிவிட்டி கிடைக்கும். Access 125–ல் Bluetooth, Navigation, Call & Message Alert, பெரிய சீட், அதிக ஸ்டோரேஜ் – குடும்பத்திற்கு ஏற்றது. நீண்ட ஆயுள், மெக்கானிக்கல் நம்பிக்கை, அதிக சர்வீஸ் நெட்வொர்க்–இவையால் Activa 125 ஒரு பாபுலர் சாய்ஸ். விலைப் பகுதி Access 125 சுமார் ரூ.77,284 முதல் மற்றும் Activa 125 ரூ.88,339 முதல் (எக்ஸ்-ஷோரூம்) ஆகிய விலைகளில் ஆரம்பிக்கிறது. விவரங்களுக்கு அருகில் உள்ள டீலரிடம் தெரிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories