இந்த நவம்பர் மாதம், ஹோண்டா நிறுவனம் தனது கார்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட மாடல்களில் லட்சக்கணக்கில் சேமிக்கலாம்.
நீங்கள் புதிய கார் வாங்க திட்டமிட்டு இருந்தால், இந்த நவம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் வழங்கும் சிறப்பு தள்ளுபடிகளை முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹோண்டாவின் பிரபலமான கார்களான Amaze, New Amaze, Honda City, மற்றும் Elevate SUV போன்ற மாடல்களில் பெரிய அளவில் சேமிப்பு பெறலாம். குறிப்பாக Amaze 2nd Gen மாடலில் அதிகபட்சமாக ரூ.1,61,000 வரை சலுகைகள் உள்ளன. எந்த மாடலில் எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
25
அதிக தள்ளுபடி
முதல் தலைமுறை Amaze-ஐ விட Amaze 2nd Gen மாடலில் அதிக சலுகை கிடைக்கிறது. இந்த கார் வாங்கினால் ரூ.98,000 வரை தள்ளுபடி கிடைக்கும். இதன் ஆரம்ப விலை ரூ.6,97,900 (எக்ஸ்-ஷோரூம்). சிட்டி யூஸ் மற்றும் குடும்ப காராக விரும்புபவர்களுக்கு இது நல்ல தேர்வு ஆகும்.
35
ரூ.1.57 லட்சம் வரை சலுகை
ஹோண்டா சிட்டி வாங்க நினைப்பவர்கள் நவம்பரில் அதிகபட்சமாக ரூ.1,57,700 வரை சேமிக்கலாம். இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்த செடான் கார் ரூ.11,95,300 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்குகிறது. பிரீமியம் லுக், கம்பர்ட் மற்றும் i-VTEC என்ஜின் செயல்திறன் காரணமாக சிட்டிக்கு பெரிய டிமாண்ட் உள்ளது.
புதிய SUV வாங்கலாமா என நினைத்தால், Honda Elevate-ல் அதிகபட்சமாக ரூ.1,61,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.10,99,900 (எக்ஸ்-ஷோரூம்). மேலும் New Amaze மாடல் வாங்கினால் ரூ.67,000 வரை சலுகை உள்ளது, ஆரம்ப விலை ரூ.7,40,800.
55
ஹோண்டா சலுகை
இந்த சலுகைகள் நவம்பர் 30, 2025 வரை மட்டுமே செல்லுபடியாகும். வேரியண்ட், நகரம், மற்றும் டீலர் அடிப்படையில் தள்ளுபடிகள் மாறலாம். சரியான விவரங்களுக்கு அருகிலுள்ள ஹோண்டா ஷோரூமுடன் தொடர்பு கொள்ளுங்கள்.