பசுமை எரிபொருளுக்கான தேவை அதிகரித்து வருவதால், இப்போது மின்சார ஸ்கூட்டர்களுடன் சி.என்.ஜி ஸ்கூட்டர்களுக்கும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்காக சுசூகி நிறுவனம் புதிய முயற்சியை எடுத்துள்ளது. பெட்ரோல் + CNG இணைப்பு மூலம் ஓடும் ஒரு ஹைபிரிட் ஸ்கூட்டரை தயாரித்துள்ளது. இந்த ஸ்கூட்டர் முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில் சுமார் 170 கிலோமீட்டர் வரை ஓட முடியும். இது வரும் நாட்களில் இந்திய சந்தையில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது.