ஹோண்டா லிவோ 2025 பைக், டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் 109.51சிசி இன்ஜின், eSP தொழில்நுட்பத்துடன் லிட்டருக்கு 60-65 கி.மீ. மைலேஜ் தருகிறது.
ஹோண்டா லிவோ 2025 இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. டிரம் பிரேக் வேரியன்ட் விலை ரூ.77,492 டிஸ்க் பிரேக் வேரியன்ட் விலை ரூ.80,059. குறைந்த பட்ஜெட்டில் பைக் வாங்குவோருக்கு இது சிறந்த தேர்வாகும்.
24
குறைந்த விலை பைக்
ஹோண்டா லிவோ 2025 பைக்கில் 109.51சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் உள்ளது. இது 8.7 bhp சக்தியையும், 9.3 Nm டார்க்கையும் வழங்குகிறது. 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் மென்மையான பயண அனுபவத்தை அளிக்கிறது.
34
ஹோண்டா புதிய பைக்
ஹோண்டா லிவோ 2025, நிஜ உலகப் பயன்பாட்டில் லிட்டருக்கு 60-65 கி.மீ. மைலேஜ் தருகிறது. 9 லிட்டர் டேங்க் மூலம், ஒருமுறை நிரப்பினால் 600 கி.மீ. வரை பயணிக்கலாம். eSP தொழில்நுட்பம் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்துகிறது.
இந்த பைக்கின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ECO இன்டிகேட்டர், சர்வீஸ் ரிமைண்டர், CBS (காம்பி பிரேக்கிங் சிஸ்டம்), சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட்-ஆஃப,. முன்பக்க டிஸ்க் மற்றும் பின்பக்க டிரம் பிரேக்குகள் ஆகும்.