இந்திய சாலைகளின் ராஜா இந்த கார் தான்.. ஒரு லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ்.. எது தெரியுமா?

Published : Nov 06, 2025, 01:35 PM IST

மாருதி சுசுகியின் பிரபலமான ஹாட்ச்பேக் மாடலான வேகன் ஆர், இந்தியாவில் 34 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது. அதன் இடவசதி மற்றும் சிறந்த மைலேஜ் ஆகியவற்றால் இது இந்திய குடும்பங்களின் விருப்பமான காராக திகழ்கிறது.

PREV
14
மாருதி வேகன் ஆர் விற்பனை

மாருதி சுசுகியின் மிகப்பிரபலமான ஹாட்ச்பேக் மாடலான வேகன் ஆர் இந்தியாவில் புதியது சாதனையை படைத்துள்ளது. இந்த மாடல் இதுவரை நாட்டில் மொத்தம் 34 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி, மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் மூன்று கோடி யூனிட்கள் வரலாற்று மயில்கல்லை எட்டியுள்ளது. 1999-ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகமான வேகன் ஆர், அதன் வசதிகள், இடவசதி மற்றும் நம்பகத்தன்மையால் மக்கள் மனதில் சிறப்பான இடத்தைப் பெற்றது.

24
வேகன் ஆர் விற்பனை சாதனை

முதல் தலைமுறை வேகன் ஆர் 1999-ல் அறிமுகமானது. 1.1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 5-வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட இதன் விசாலமான உட்புறம், பவர் விண்டோஸ் போன்ற அம்சங்கள் வாடிக்கையாளர்களை ஈர்த்தது. 2006-ல் எல்பிஜி வேரியண்ட் அறிமுகமானது, இது மலிவு எரிபொருள் விருப்பமாக பெரும் வரவேற்பைப் பெற்றது. 2010-ல் இரண்டாம் தலைமுறை மாதல் புதிய வடிவமைப்புடன் வந்தது, பின்னர் 2013-ல் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சிறந்த ஆடியோ சிஸ்டம், இரட்டை குலோவ் பாக்ஸ் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

34
வேகன் ஆர் ஃபேஸ்லிஃப்ட்

2019-ல் அறிமுகமான மூன்றாம் தலைமுறை வேகன் ஆர், புதிய பிளாட்ஃபார்மில், பாதுகாப்பு மற்றும் வசதி அம்சங்களில் மேம்பாடு பெற்றது. 2022-ல் வந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல், 7 இன்ச் டஸ்கிரீன், நெவிகேஷன், ஸ்மார்ட்பிளே ஸ்டுடியோ, கிளவுட் சேவை, ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் பார்கிங் சென்சார் போன்ற வசதிகளுடன் வந்தது.

44
வேகன் ஆர் மைலேஜ்

வேகன் ஆர் தற்போது 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் மற்றும் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின்களுடன் கிடைக்கிறது. 1.0 லிட்டர் மாடல் ஒரு லிட்டருக்கு 25.19 கிமீ மைலேஜ் வழங்கல், சிஎன்ஜி வேரியண்ட் 34.05 கிமீ/கிலோ வரை எரிபொருள் சிக்கனத்தை உறுதி செய்கிறது. 1.2 லிட்டர் கே-சீரிஸ் இன்ஜின் 24.43 கிமீ மைலேஜ் வழங்கும். இதன் நம்பகத்தன்மை, குறைந்த செலவு, சிறந்த மைலேஜ் பராமரிப்பு ஆகியவை உள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories