Rain Riding Tips: மழைக்காலத்தில் பைக், ஸ்கூட்டர் ஓட்டுபவர்கள் கவனம்! இந்த தவறுகள் விபத்துக்கு காரணமாகலாம்

Published : Jul 22, 2026, 03:55 PM IST

Rain Riding Tips: மழைக்காலத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுவது கோடைக்காலத்தை விட அதிக கவனத்தை ஈர்க்கிறது. ஈரமான சாலைகள், தண்ணீர் தேக்கம், மறைந்திருக்கும் பள்ளங்கள் மற்றும் குறைந்த பார்வைத்திறன் போன்ற காரணங்களால் விபத்து அபாயம் அதிகரிக்கலாம்.

PREV
15
மழையில் பைக் ஓட்டுகிறீர்களா?

மழைக்காலத்தில் சாலைகள் வழுக்கும் தன்மை கொண்டதாக மாறுவதால், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறிய அலட்சியம்கூட விபத்துக்கு வழிவகுக்கலாம். எனவே, மழையில் பைக் அல்லது ஸ்கூட்டரில் பயணம் செய்வதற்கு முன் சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும்.

25
மழைக்காலத்தில் பைக், ஸ்கூட்டர் ஓட்டுபவர்கள் கவனம்

முதலில், டயர்களின் நிலையை சரிபார்க்க வேண்டும். அதிகமாக தேய்ந்த டயர்கள் ஈரமான சாலைகளில் பிடிப்புத்திறனை இழக்கக்கூடும். டயர் டிரெட் (Tread) போதுமான அளவில் உள்ளதா என்பதையும், காற்றழுத்தம் சரியாக உள்ளதா என்பதையும் உறுதி செய்யுங்கள். மேலும், பிரேக்குகளும் சிறப்பாக செயல்படுகிறதா என்பதை முன்கூட்டியே பரிசோதிக்க வேண்டும். மழையில் திடீர் பிரேக் பிடிப்பதைத் தவிர்த்து, முன் மற்றும் பின் பிரேக்குகளை மெதுவாகப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

600 கிமீ ரேஞ்ச்.. 30 நிமிடத்தில் சார்ஜ்! இந்தியாவுக்கு வரும் வால்வோவின் பிரீமியம் கார்

35
மழையில் பைக் சறுக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மழை பெய்யும் போது வழக்கத்தை விட குறைந்த வேகத்தில் வாகனம் ஓட்டுவது நல்லது. முன்னால் செல்லும் வாகனத்துடன் போதுமான இடைவெளியை வைத்திருப்பது திடீர் பிரேக்கிங் அல்லது பள்ளங்களைத் தவிர்க்க உதவும். மேலும், பகல் நேரத்திலும் ஹெட்லைட்டை எரியவிடுவது மற்ற வாகன ஓட்டுநர்கள் உங்களை எளிதில் கவனிக்க உதவும். ஹெல்மெட் வைசரை சுத்தமாக வைத்திருப்பதும், மழைத்துளிகள் அல்லது பனிமூட்டம் காரணமாக பார்வை மறையாமல் இருக்க உதவும்.

45
மழையில் பைக் ஓட்டுவது

தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீருக்குள் பள்ளங்கள் அல்லது திறந்த மேன்ஹோல்கள் இருக்கக்கூடும். அவசியமெனில் மெதுவாகச் சென்று, நடுவழியில் வாகனத்தை நிறுத்தாமல் கடக்க முயற்சிக்கவும். இது எஞ்சினுக்குள் தண்ணீர் புகும் அபாயத்தையும் குறைக்க உதவும். மழைக்காலம் தொடங்கும் முன் வாகனத்திற்கு முழுமையான சர்வீஸ் செய்வது நல்ல நடைமுறையாகும். பேட்டரி, செயின், விளக்குகள், இன்டிகேட்டர்கள் மற்றும் ஹார்ன் ஆகியவை சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யுங்கள். மழையில் நனைந்த பிறகு வாகனத்தைத் துடைத்து உலர்த்துவது துருப்பிடிப்பைத் தடுக்க உதவும்.

55
மழைக்கால பைக் பயணம்

பயணத்தின் போது நல்ல தரமான முழு முக ஹெல்மெட்டை அணிவது மிகவும் முக்கியம். அதோடு கையுறைகள், உறுதியான காலணிகள் மற்றும் மழைக்கான பாதுகாப்பு உடைகளை அணிவது பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும். ஈரமான செருப்பு அல்லது ஸ்லிப்பர்களை அணிந்து வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories