Volvo Electric Car: எலக்ட்ரிக் கார் வாங்க நினைப்பவர்களின் எதிர்பார்ப்பு இன்று வெறும் நீண்ட நேரம் மட்டுமல்ல. வேகமான சார்ஜிங், அதிக பாதுகாப்பு அம்சங்கள், பிரீமியம் கேபின் மற்றும் குடும்பத்துடன் பயணிக்கக்கூடிய வசதிகளும் முக்கியமாகிவிட்டன.
பிரீமியம் எலக்ட்ரிக் வாகன சந்தையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில், வால்வோ தனது முன்னணி எலக்ட்ரிக் எஸ்யூவியான EX90-வை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அறிமுக தேதி மற்றும் விலை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த மாடல் விரைவில் இந்திய சந்தைக்கு வருவது உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் அறிமுகமான பிறகு, வால்வோ நிறுவனத்தின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட எலக்ட்ரிக் எஸ்யூவி ஆக EX90 இருக்கும். தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள வால்வோ EX30 மற்றும் EC40 மாடல்களுக்கு மேலான நிலையில் EX90 இடம்பெற்றுள்ளது. இது சர்வதேச சந்தைகளில் பிரபலமான XC90 எஸ்யூவி-க்கு எலக்ட்ரிக் மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது.
24
புதிய எலக்ட்ரிக் கார்
நிறுவனத்தின் புதிய SPA2 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எஸ்யூவி, நவீன மென்பொருள் தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளது. முன்புறத்தில் வால்வோ-வின் அடையாளமான Thor's Hammer LED ஹெட்லெம்ப்கள், Flush Door Handles மற்றும் ஈரோடினமிக் அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன.
உட்புறத்தில் பெரிய செங்குத்து (செங்குத்து) டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வாகன கட்டுப்பாடுகளும் இதன் மூலம் செயல்படுகின்றன. கேபினில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குடும்ப பயன்பாட்டை கருத்தில் கொண்டு 7 பேர் அமரக்கூடிய வசதியும் வழங்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் இந்த எஸ்யூவி, 111 kWh பேட்டரியுடன் Twin Motor மற்றும் Twin Motor Performance என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. முழு சார்ஜில் அதிகபட்சமாக 600 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்று வால்வோ தெரிவித்துள்ளது.
சார்ஜிங் வசதியிலும் EX90 கவனம் ஈர்க்கிறது. இது 250 kW DC Fast Charging வசதியை ஆதரிக்கிறது. இதன் மூலம் பேட்டரியை 10 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை சுமார் 30 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் என நிறுவனம் கூறுகிறது. நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் பயனர்களுக்கு இது குறிப்பிடத்தக்க பலனாக இருக்கும்.
பாதுகாப்பு அம்சங்கள் வால்வோ EX90-வின் மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. LiDAR சென்சார், பல கேமராக்கள், ரேடார் மற்றும் அல்ட்ராசோனிக் சென்சார்கள் இணைந்து செயல்பட்ட ஓட்டுநருக்கு உதவுவதோடு, விபத்து அபாயத்தையும் குறைக்க உதவுகின்றன.
இந்திய சந்தையில் இந்த எஸ்யூவி, Mercedes-Benz EQS எஸ்யூவி, BMW iX மற்றும் Audi Q8 e-tron போன்ற பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவி-களுக்கு போட்டியாக இருக்கும். இருப்பினும், இந்திய அறிமுக தேதி, விலை மற்றும் டெலிவரி தொடங்கும் காலம் குறித்து வால்வோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.