ஹோண்டா ஆக்டிவா 7G, புதிய ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட வசதிகளுடன் வரவுள்ளது. 110cc இன்ஜின், 55-60 கிமீ மைலேஜ், ஸ்மார்ட் கீ, டிஜிட்டல் கிளஸ்டர் போன்ற அம்சங்களுடன் வரவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்திய சாலைகளில் அதிகம் நம்பிக்கை பெற்ற ஸ்கூட்டர் என்றால் அது ஹோண்டா ஆக்டிவா தான். அலுவலகம் செல்லும் இளைஞர்கள் முதல் குடும்பப் பயணங்கள் வரை அனைவருக்கும் “செல்லும் வண்டி” போல இருக்கும் ஆக்டிவா, இப்போது Activa 7G என்ற புதிய மாடலில் இன்னும் ஸ்டைலிஷாக வருகிறது. புதிய லுக், நல்ல மைலேஜ், மேம்பட்ட வசதிகள் என பல அப்டேட்களுடன் மத்திய தர மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
24
ஹோண்டா ஆக்டிவா 7ஜி
இந்த முறை ஹோண்டா டிசைனில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. முன்னால் LED ஹெட்லேம்ப் + DRL (பகல்நேரத்தில் இயங்கும் விளக்குகள்) இணைப்புடன் கூடிய பிரைட் லைட்டிங் கிடைக்கும். பின்னால் உள்ள டெயில் லைட் கூட புதிய வடிவில் வர வாய்ப்பு உள்ளது. மேலும், இளைஞர்கள் விரும்பும் வகையில் பல டிரெண்டி கலர் ஆப்ஷன்கள் சேர்க்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
34
ஆக்டிவா 7ஜி 60 கிமீ மைலேஜ்
எஞ்சின் விஷயத்தில், Activa 7G-ல் 110cc ரிஃபைண்ட் (Air-cooled, Fuel-injected) என்ஜின் இருக்கும் என கூறப்படுகிறது. முக்கியமாக, மத்திய தர மக்கள் முதலில் பார்க்கும் விஷயம் மைலேஜ் என்பதால், இந்த ஸ்கூட்டர் 55 முதல் 60 கி.மீ/லிட்டர் வரை தரக்கூடும் என்ற தகவல் கவனம் பெறுகிறது. இது தினமும் அலுவலகம் போகும் பயனர்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும், இளைஞர்களுக்கும் நல்ல சேமிப்பு தரும்.
வசதிகளில் Smart TFT டிஜிட்டல் கிளஸ்டர், Bluetooth கனெக்டிவிட்டி, கீ இல்லாமல் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் Smart Key போன்ற அம்சங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புக்கு Front Disc Brake, Telescopic Forks, Adjustable Rear Suspension போன்ற மேம்பாடுகளும் இருக்க வாய்ப்பு உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.80,000 முதல் ரூ.90,000 வரை இருக்கலாம் என்றும், 2026 அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகமாகலாம் என்றும் மார்க்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.