ஒரு சார்ஜில் நீண்ட பயணம்! குறைந்த விலை டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

Published : Aug 20, 2025, 11:48 AM IST

பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து, மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. டிவிஎஸ் ஐக்யூப், ஓலா எஸ்1 இசட், விடா வி2எக்ஸ் கோ, ஹோண்டா QC1, சேடக் 3001 ஆகிய 5 சிறந்த மாடல்கள் சந்தையில் உள்ளன.

PREV
16
சிறந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

இன்றைய நிலையில் நடுத்தர வர்க்க மக்களுக்கு குறைந்த விலை மற்றும் அதிக மைலேஜ் தரக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தேவை அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயரும் நிலையில், குறைந்த செலவில் பயணம் செய்யும் வகையில் பல நிறுவனங்கள் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இங்கே அவற்றில் சிறந்த 5 மாடல்களை பார்ப்போம்.

26
டிவிஎஸ் ஐக்யூப்

டிவிஎஸ் நிறுவனத்தின் iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டர், விலை மற்றும் செயல்திறன் இரண்டிலும் சிறந்ததாக உள்ளது. இதன் விலை ரூ.94,434. 2.2 Kwh பேட்டரி கொண்டது. ஒருமுறை சார்ஜில் 94 கிமீ வரை செல்லும். அதிகபட்ச வேகம் 75 kmph. 4.4 Kwh பவர் உற்பத்தி செய்யும் மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

36
ஓலா எஸ்1 இசட்

ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களில் முன்னணி. புதிய Ola S1 Z இரண்டு வேரியண்டுகளில் வந்துள்ளது. S1 Z STD விலை ரூ.59,999, S1 Z+ விலை ரூ.64,999. இரண்டிலும் ஒருமுறை சார்ஜில் 146 கிமீ வரை செல்லும் திறன் உள்ளது. அதிகபட்ச வேகம் 70 kmph. மலிவு விலையில் நீண்ட ரேஞ்ச் தருவதால் இளம் தலைமுறையினர் விரும்பும் வகையில் உள்ளது.

46
விடா வி2எக்ஸ் கோ

ஹீரோ விடா நிறுவனம் தனது புதிய மாடலான Vida V2X Go-வை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.44,990 மட்டுமே. 2.2 Kwh பேட்டரி கொண்ட இதன் ரெஞ்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால் 92 கிலோமீட்டர் வரை செல்லும். அதிகபட்ச வேகம் 70 kmph என்பதால் குறைந்த விலையில் சிறந்த பயணம் செய்யலாம்.

56
ஹோண்டா QC1

ஹோண்டா நிறுவனம் தனது மிகச்சிறிய விலை எலக்ட்ரிக் மாடலான Honda QC1-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.94,094. 1.8 Kwh பேட்டரி கொண்ட இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜில் 80 கிமீ வரை செல்லும். அதிகபட்ச வேகம் 50 kmph. நகர்ப்புறங்களில் குறைந்த தூரப் பயணங்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

66
சேடக் 3001

ஒருகாலத்தில் மிகவும் பிரபலமான சேடக் ஸ்கூட்டர், இப்போது எலக்ட்ரிக் பதிப்பில் Chetak 3001 என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1.07 லட்சம். 3 Kwh பேட்டரி கொண்ட இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜில் 127 கிமீ வரை செல்லும். பழைய சேடக் ரசிகர்களுக்கு இது நல்ல தேர்வு.

Read more Photos on
click me!

Recommended Stories