ஒரே சார்ஜில் சென்னை டூ திருச்சி போகலாம்! MG விண்ட்சர் EV இன்டல்ஜ் எடிஷன் அறிமுகம்! என்ன ஸ்பெஷல்?

Published : Oct 15, 2026, 07:19 PM IST

MG Windsor EV: எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விண்ட்சர் இவி காரின் புதிய 'இன்டல்ஜ் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. 38 kWh பேட்டரியுடன் வரும் இந்த கார், ஒரு முறை சார்ஜ் செய்தால் 332 கிமீ ரேஞ்ச் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
14
MG விண்ட்சர் EV இன்டல்ஜ் எடிஷன் அறிமுகம்

எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விண்ட்சர் இவி காரின் புதிய லிமிடெட் எடிஷனை களமிறக்கியுள்ளது. 'எம்ஜி விண்ட்சர் இவி இன்டல்ஜ் எடிஷன்' (MG Windsor EV Indulge Edition) என அழைக்கப்படும் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 17.89 லட்சம் ரூபாய். ஸ்டாண்டர்டு மாடலின் எசென்ஸ் வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண மாடலை விட இதற்கு சுமார் 89,000 ரூபாய் அதிகம். புதிய கலர், ஸ்பெஷல் சீட்டுகள், பின் இருக்கை பயணிகளுக்கான கூடுதல் ஸ்கிரீன் ஆகியவை இதன் முக்கிய சிறப்பம்சங்கள்.

24
ஷேடோ கோல்டு நிறத்தில் புதிய எடிஷன்

இந்த இன்டல்ஜ் எடிஷன் பிரத்யேகமான 'ஷேடோ கோல்டு' (Shadow Gold) நிறத்தில் கிடைக்கிறது. காரின் பின்பக்க குவார்ட்டர் கிளாஸ்களில் இன்டல்ஜ் பேட்ஜ்களும், கருப்பு நிற அலாய் வீல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் உள்ளேயும் பல மாற்றங்கள் உள்ளன. கருப்பு மற்றும் பிரவுன் நிறத்திலான லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி, இன்டல்ஜ் தீம் குஷன்கள், கழுத்துக்கு சப்போர்ட் தரும் தலையணைகள் என இன்டீரியர் அசத்துகிறது. முன் இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட்களிலும் 'Indulge' என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

பின் இருக்கை பயணிகளுக்கு புது ஸ்கிரீன்

இந்த புதிய எடிஷனின் மிகப்பெரிய ஹைலைட் 'ப்ரைவ் ஸ்கிரீன்' தான். காரின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்கிரீனை தேவைப்படும்போது கீழே மடித்து விட்டுக்கொள்ளலாம். பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் பொழுதுபோக்கிற்காக இதை பயன்படுத்திக்கொள்ளலாம். சாதாரண விண்ட்சர் இவி மாடலில் இல்லாத இந்த வசதி, புதிய எடிஷனை தனித்துக் காட்டுகிறது.

34
38 kWh பேட்டரி; 332 கி.மீ ரேஞ்ச்

இந்த இன்டல்ஜ் எடிஷன் 38 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. காரின் முன் ஆக்சிலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 136 bhp பவரையும், 200 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும். காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 332 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என எம்ஜி நிறுவனம் கூறுகிறது. அதேசமயம், சாதாரண எம்ஜி விண்ட்சர் இவி காரில் 52.9 kWh பேட்டரி பேக் ஆப்ஷனும் உள்ளது. அது ஒரு முறை சார்ஜ் செய்தால் 449 கி.மீ ரேஞ்ச் கொடுக்கும். அதிக ரேஞ்ச் வேண்டும் என நினைப்பவர்கள் ஸ்டாண்டர்டு மாடலை தேர்வு செய்யலாம்.

44
பிரீமியம் வசதிகளுக்கு பஞ்சமில்லை

எசென்ஸ் வேரியண்ட்டில் உள்ள அனைத்து முக்கிய வசதிகளும் இந்த இன்டல்ஜ் எடிஷனிலும் தொடர்கின்றன. இன்ஃபினிட்டி 9-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், PM 2.5 ஏர் ஃபில்டர், ஆம்பியன்ட் லைட்டிங், கிளாஸ் ரூஃப் ஆகியவை இதில் அடங்கும். வயர்லெஸ் சார்ஜர், வைஃபை கனெக்டிவிட்டி, ஓவர்-தி-ஏர் (OTA) சாஃப்ட்வேர் அப்டேட்கள், ஆட்டோ டிம்மிங் IRVM ஆகிய வசதிகளும் உள்ளன. 15.6 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்களும் காரில் இடம்பெற்றுள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories