யமஹா நிறுவனம் தனது பிரீமியம் 'கிராண்ட் ஃபிலானோ 125சிசி ஹைப்ரிட்' ஸ்கூட்டரை சர்வதேசச் சந்தையில் புதிய வண்ணங்கள் மற்றும் சொகுசு அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
யமஹா மோட்டார் நிறுவனம் தனது உலகத்தரம் வாய்ந்த பிரீமியம் 125சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டரான 'யமஹா கிராண்ட் ஃபிலானோ ஹைப்ரிட்' (Yamaha Grand Filano Hybrid) மாடலை, புத்தம் புதிய வண்ணங்கள் மற்றும் சொகுசு அம்சங்களுடன் சர்வதேசச் சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய சர்வதேச நாடுகளின் கம்யூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டா எஸ்எச் மோட் (Honda SH Mode) ஸ்கூட்டருக்கு நேரடிப் போட்டியாகக் களம் இறக்கப்பட்டுள்ள இந்த சொகுசு ஹைப்ரிட் ஸ்கூட்டரானது, வியட்நாமிய மதிப்பில் சுமார் 50 மில்லியன் விஎன்டி (50 million VND) ஆரம்ப விலையில் தற்பொழுது ஷோரூம்களுக்கு விற்பனைக்கு வந்துள்ளது.
இந்தியச் சந்தையில் 'யமஹா கிராண்டே' (Yamaha Grande) என்ற பெயரில் பல்வேறு ஆட்டோ எக்ஸ்போக்களில் காட்சிப்படுத்தப்பட்டு வரக்கூடிய இந்த அதிநவீன ஸ்கூட்டரின் வேரியன்ட்கள், விலை மற்றும் இன்ஜின் அம்சங்கள் குறித்த விவரங்களை பற்றி பார்போம்.
24
மாடல்கள் & விலை விவரங்கள்
யமஹா கிராண்ட் ஃபிலானோ ஹைப்ரிட் ஏபிஎஸ் மாடல் (ABS Version): இந்த உயர்ரக மாடலானது பிரத்தியேக 'டீப் நேவி புளூ' (Deep Navy Blue) வண்ணத்துடன் சேர்த்து மொத்தம் ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் தாய்லாந்து பரிந்துரைக்கப்பட்ட சில்லறை விலை 69,200 பாட் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1.66 லட்சம் / 54 மில்லியன் VND) ஆகும்.
யமஹா கிராண்ட் ஃபிலானோ ஹைப்ரிட் ஸ்டாண்டர்ட் மாடல் - இந்த ஆரம்ப நிலை மாடலானது 'லைட் பாஸ்டல் புளூ' (Light Pastel Blue), மச்சா லட்டே, அப்சிடியன் பிளாக் உள்ளிட்ட ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் தாய்லாந்து பரிந்துரைக்கப்பட்ட சில்லறை விலை 64,700 பாட் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1.55 லட்சம் / 50 மில்லியன் VND) இலிருந்து தொடங்குகிறது.
34
அசாத்திய மைலேஜ்
இந்த ஸ்கூட்டரில் யமஹாவின் புகழ்பெற்ற 125cc புளூ கோர் ஹைப்ரிட் இன்ஜின் (125cc Blue Core Hybrid Engine) மிக நேர்த்தியாகப் பொருத்தப்பட்டுள்ளது. நாம் வண்டியை ஆரம்பத்தில் முறுக்கி எடுக்கும் போது (Initial Acceleration), இதிலுள்ள எலக்ட்ரிக் ஹைப்ரிட் சிஸ்டம் இன்ஜினுக்குக் கூடுதல் எலக்ட்ரிக் பூஸ்ட் பவரை வாரி வழங்குவதால், வண்டி டிராஃபிக் சாலைகளிலும் எவ்விதச் சத்தமும் இன்றி மிகவும் ஸ்மூத்தாகவும் சுறுசுறுப்பாகவும் சீறிப்பாயும்.
இன்ஜினின் வெப்பத்தை உடனடியாகக் கடத்தி, வண்டியின் ஆயுளைக் கூட்ட இதில் பிரத்தியேக 'டயசில்' (DiASiL Technology) உள்கட்டமைப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஹைப்ரிட் கூட்டு உழைப்பின் காரணமாக, இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்குச் சுமார் 62.5 கிலோமீட்டர் வரை அசாத்திய மைலேஜ் (Certified Fuel Efficiency) வாரி வழங்கி வாடிக்கையாளர்களின் பாக்கெட்டில் பணத்தை மிச்சப்படுத்துகிறது.
இவற்றுடன் சிக்னல்களில் வண்டி நிற்கும் போது பெட்ரோலைச் சேமிக்க உதவும் 'ஸ்டாப் அண்ட் ஸ்டார்ட்' (Stop & Start System) மற்றும் ஒரே பிரஸ்ஸில் வண்டியை ஸ்டார்ட் செய்யும் 'ஒன் புஷ் ஸ்டார்ட்' வசதிகளும் இதில் தரநிலையாக இடம் பெற்றுள்ளன.