தப்பிச்சு எப்படியாவது ஓடிவிடு.. ஃபார்ச்சூனர் காருக்கு சவால் விடும் எம்ஜி.. தேதி எல்லாம் குறிச்சாச்சு

Published : Jan 21, 2026, 12:56 PM IST

எம்ஜி நிறுவனம் தனது புதிய முழு அளவிலான எஸ்யூவி மாடலான மஜெஸ்டரை பிப்ரவரி 12, 2026 அன்று அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மாடல், Toyota Fortuner மற்றும் Skoda Kodiaq போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

PREV
13
எம்ஜி மஜெஸ்டர்

எம்ஜி நிறுவனம் தனது புதிய முழு அளவிலான எஸ்யூவி மாடலான எம்ஜி மஜெஸ்டர்-ஐ பிப்ரவரி 12, 2026 அன்று ஷோரூம்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாடல் முதன்முதலில் பாரத் மொபிலிட்டி ஷோ 2025 நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் பலமுறை சாலை சோதனைகளிலும் காணப்பட்டது. அறிமுகமாகும் உடனே இது Skoda Kodiaq, Toyota Fortuner, Jeep Meridian மற்றும் வரவிருக்கும் Volkswagen Tayron R-Line போன்ற மாடல்களுடன் நேரடி போட்டியில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பை எடுத்துக்கொண்டால், மஜெஸ்டர் தோற்றத்தில் எம்ஜி Gloster-ஐ விட கம்பீரமாகவும் ஸ்போர்ட்டியாகவும் உள்ளது.

23
எம்ஜி மஜெஸ்டர் அம்சங்கள்

முன்பக்கத்தில் புதிதாக இணைக்கப்பட்ட கிரில், செங்குத்தாக அடுக்கப்பட்ட LED ஹெட்லெம்ப்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பம்பர் ஆகியவை முக்கிய கவனம் பெறுகின்றன. அதே நேரத்தில் பேனட் மற்றும் கதவுகளில் இருக்கும் ஷீட் மெட்டல் அமைப்பு சில அளவில் குளோஸ்டரை நினைவுபடுத்துகிறது. பக்கவாட்டில் 19-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்கள், பெரிய வீல் ஆர்ச் கில்லாடிங், கருப்பு ரூஃப் ரெயில்கள் ஆகியவை பிரீமியம் தோற்றத்தை அதிகரிக்கின்றன. பின்புறத்தில் இணைக்கப்பட்ட LED டெயில்லெம்ப்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் அமைப்பு மற்றும் இருபுற எக்ஸாஸ்ட் டிப்ஸ் ஆகியவை இதன் ஸ்டைலை மேலும் உயர்த்துகின்றன.

33
எதிர்பார்க்கப்படும் வசதிகள்

உட்புறம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டாலும், பல ஹைடெக் அம்சங்கள் இதில் இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. மஜெஸ்டர் மாடலில் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன், டிஜிட்டல் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப், 12-ஸ்பீக்கர் சவுண்ட், 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், 360 கேமரா, TPMS மற்றும் Level 2 ADAS போன்ற அம்சங்கள் வரக்கூடும். இன்ஜின் பகுதியில் Gloster-n 2.0L ட்வின்-டர்போ டீசல், 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், AWD உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை ரூ.39.57 லட்சம் முதல் ரூ.44.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் வாய்ப்பு உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories