Suzuki Baleno Regal
இந்த பண்டிகைக் காலத்தில் பலேனோ தனது புதிய மற்றும் சிறப்பான ரீகல் பதிப்பை வெளியிடுகிறது. இது அனைத்து வகைகளிலும் கிடைக்கிறது. மேலும் இந்த பண்டிகை காலத்தில் இந்த காரை வாங்கும்போது பலேனோ ரீகல் எடிஷனுடன் பல கூடுதல் ஆக்சஸெரீகளும் உங்களுக்கு கிடைக்கும். அதாவது முன்பக்க அண்டர்பாடி ஸ்பாய்லர், ரியர் அண்டர்பாடி ஸ்பாய்லர், டூயல்-டோன் சீட் கவர்கள், 3டி மேட்ஸ், சைட் மோல்டிங்ஸ், மட் ஃபிளாப்ஸ், 3டி பூட் மேட். கிரில் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவற்றுக்கான குரோம் அலங்காரம் ஆகியவை இதில் அடங்கும். மேலும் ஒரு பாடி கவர், நெக்ஸா குஷன்கள், கதவு வைசர்கள், சில் கார்டுகள், ஜன்னல் திரைமறைப்பான்கள், டயர் இன்ஃப்ளேட்டர், லோகோ புரொஜெக்டர் விளக்கு மற்றும் குரோம் கதவு கைப்பிடிகளும் இதில் அடக்கம். மேலும் இந்த காரின் ஆரம்ப விலை சுமார் 7.3 லட்சமாகும்.