இந்தக் காரை வாங்கினால் ரூ.50,000 வரை சேமிக்கலாம்; தீபாவளி ஆஃபர்!!

First Published | Oct 24, 2024, 11:22 AM IST

மாருதி சுஸுகி பண்டிகை கால தள்ளுபடிகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக அதன் பிரபலமான ஹேட்ச்பேக் காரான ஸ்விஃப்ட் வாங்க அதிரடி தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்தச் சிறப்பு சலுகையை பயன்படுத்தி இந்த தீபாவளிக்கு ஸ்விஃப்ட் காரை வாங்கினால் ரூ.50,000 வரை சேமிக்கலாம்.

Maruti Suzuki Swift

மாருதி சுஸுகி பண்டிகை கால தள்ளுபடிகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக அதன் பிரபலமான ஹேட்ச்பேக் காரான ஸ்விஃப்ட் வாங்க அதிரடி தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்தச் சிறப்பு சலுகையை பயன்படுத்தி இந்த தீபாவளிக்கு ஸ்விஃப்ட் காரை வாங்கினால் ரூ.50,000 வரை சேமிக்கலாம்.

Maruti Suzuki Swift

வாங்கும் மாடலைப் பொறுத்து, ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை தள்ளுபடியை பெறலாம். இத்துடன் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் பெறலாம். VXi மற்றும் VXi (O) மாடல்களை வாங்கினால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Blitz கிட் இலவசமாக வழங்கப்படுகிறது.

Tap to resize

Maruti Suzuki Swift

MT வேரியண்ட் ரூ.25,000 தள்ளுபடியிலும், AMT வேரியண்ட் ரூ.30,000 தள்ளுபடியிலும் கிடைக்கும். கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,100 கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட டிரிம்களுக்கு டீலர்-எண்ட் ஆஃபர்கள் ரூ.19,000 வரை உள்ளது.

Maruti Suzuki Swift

புதிதாக அறிமுகமான ஸ்விஃப்ட் CNG வேரியண்டில் எந்தத் தள்ளுபடியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு Blitz கிட் இலவசமாகத் தரப்படுகிறது. மே 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஸ்விஃப்ட் காருக்கு மாருதி வழங்கியிருக்கும் முக்கியத் தள்ளுபடி இதுதான். இது பண்டிகை காலத்தில் கவர்ச்சிகரமான ஆஃபராக இருக்கும்.

Maruti Suzuki Swift

ஸ்விஃப்ட் காரின் விலை (எக்ஸ்-ஷோரூம்) ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.59 லட்சம் வரை, உள்ளது. சிறந்த எரிபொருள் திறன் கொண்ட இசட்-சீரிஸ் 3-சிலிண்டர் எஞ்சின், AMT கியர்பாக்ஸிஸ் மணிக்கு 25.75 கி.மீ. வேகத்தில் பயணிக்கலாம்.

Maruti Suzuki Swift

Swift Blitz எடிஷமனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதல் விலையின்றி ரூ.49,848 மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்படும். இந்த லிமிட்டட் எடிஷன் மாடல் LXI, VXI, VXI AMT, VXI(O), மற்றும் VXI(O) AMT என ஐந்து டிரிம்களில் கிடைக்கிறது. இது ஸ்பாய்லர்கள், பனி விளக்குகள் போன்ற கூடுதல் அம்சங்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் மெக்கானிக்கல் அம்சங்களில் மாற்றம் இல்லை.

Latest Videos

click me!