Published : Oct 24, 2024, 10:08 AM ISTUpdated : Oct 24, 2024, 10:11 AM IST
குவாண்டம் எனர்ஜி நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு தனது பிளாஸ்மா எக்ஸ், பிளாஸ்மா எக்ஸ்ஆர் மற்றும் மிலன் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு 29 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்குகிறது.
2022 இல் நிறுவப்பட்ட குவாண்டம் எனர்ஜி ஏற்கனவே 10,000 ஸ்கூட்டர்களை விற்றுள்ளது, இப்போது இந்தியாவின் டாப் 10 எலக்ட்ரிக் டூ-வீலர் பிராண்டுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. ஆக்ரா, லக்னோ மற்றும் கான்பூரில் புதிதாக கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து குவாண்டம் எனர்ஜி ஷோரூம்களில் அக்டோபர் 18ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, பண்டிகைக் கால தள்ளுபடிகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலும் டெஸ்ட் ரைடுகளை முன்பதிவு செய்யலாம்.
25
Diwali Discounts on Electric Scooters
பண்டிகைக் கால தள்ளுபடியில் பிளாஸ்மா எக்ஸ், பிளாஸ்மா எக்ஸ்ஆர் மற்றும் மிலன் ஆகிய மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிக்க் குறைந்த விலையில் கிடைக்கின்றன. நவீன வசதிகள் கொண்ட இந்த ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய செயல்திறனையும் கொண்டுள்ளன.
பிளாஸ்மா எக்ஸ் ஸ்கூட்டரின் அசல் விலை ரூ.1,29,150 (எக்ஸ்-ஷோரூம்). இதன் தீபாவளி ஆஃபர் விலை ரூ.99,999 (எக்ஸ்-ஷோரூம்). இது 500W மோட்டார் கொண்டது. அதிகபட்ச வேகம் மணிக்கு 65 கிமீ. ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிமீ வரை ஓடும்.
45
Diwali Discounts on Electric Scooters
பிளாஸ்மா எக்ஸ்ஆர் அசல் விலை ரூ.1,09,999 (எக்ஸ்-ஷோரூம்). இதன் தீபாவளி ஆஃபர் விலை ரூ.89,999 (எக்ஸ்-ஷோரூம்). இதிலும் 1500W மோட்டார் இருக்கிறது. ஆனால், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கி.மீ. தான். ஒரு முறை முழு சார்ஜ் செய்துவிட்டு 100 கி.மீ. வரை செல்ல முடியும்.
மிலன் மாடலின் அசல் விலை ரூ.85,999 (எக்ஸ்-ஷோரூம்). இதன் தீபாவளி ஆஃபர் விலை ரூ.79,999 (எக்ஸ்-ஷோரூம்). 1000W மோட்டார் கொண்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 60 கி.மீ. அதிகபட்ச வேகத்தைக் கொடுக்கும். முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கி.மீ. தூரம் பயணிக்கலாம்.