Maruti : 32 கி.மீ மைலேஜ்... நச்சுனு 5 ஹைபிரிட் கார்களை அடுத்தடுத்து களத்தில் இறக்கும் மாருதி

Published : Jul 16, 2026, 02:54 PM IST

Maruti Hybrid cars : அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒன்பது புதிய மாடல்களை அறிமுகப்படுத்த மாருதி சுஸுகி தயாராகி வருகிறது. இதில் ஐந்து ஹைப்ரிட் எஸ்யூவிகளும் அடங்கும். அது என்னென்ன கார்கள் என்பதை பார்க்கலாம்.

PREV
16
Maruti Hybrid cars

இந்திய கார் மார்க்கெட்டில் ஹைப்ரிட் கார்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மாருதி சுஸுகி அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒன்பது புதிய மாடல்களை களமிறக்க முடிவு செய்துள்ளது. எஸ்யூவிகள், எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஹைப்ரிட் மாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த திட்டத்தில், அதிக மைலேஜ் தரும் ஐந்து ஹைப்ரிட் எஸ்யூவிகளும் இடம்பெற உள்ளன. அடுத்த ஆண்டு வரவிருக்கும் ஃபிரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மூலம், மாருதி சுஸுகி தனது சொந்த ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

HEV என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிஸ்டம், தற்போது பயன்படுத்தப்படும் டொயோட்டாவின் அட்கின்சன் சைக்கிள் ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை விட விலை குறைவாகவும், அதிக செயல்திறன் கொண்டதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஹைப்ரிட் அமைப்பை 1.2 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜினுடன் இணைத்து, எதிர்கால மாடல்களில் ஒரு லிட்டருக்கு 35 கிலோமீட்டருக்கும் அதிகமான மைலேஜ் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால், இதுகுறித்து நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

26
மாருதி கிராண்ட் விட்டாரா ஃபேஸ்லிஃப்ட்

2026-ம் ஆண்டின் பிற்பகுதியில் கிராண்ட் விட்டாரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சிறிய டிசைன் மாற்றங்களும், கூடுதல் தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெறும். 'விக்ட்ரோயிஸ்' கான்செப்ட்டில் இருந்து சில டிசைன் அம்சங்கள் இதில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. தற்போதைய இன்ஜின் ஆப்ஷன்களில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றே தெரிகிறது.

36
7 சீட்டர் கிராண்ட் விட்டாரா

மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட ஒரு புதிய பிரீமியம் எஸ்யூவியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப் போவதாக மாருதி சுஸுகி உறுதி செய்துள்ளது. 5-சீட்டர் கிராண்ட் விட்டாராவை விட நீளமாகவும், அதிக இடவசதி கொண்ட கேபினுடனும் இந்த மாடல் வரும். தற்போதைய கிராண்ட் விட்டாராவில் உள்ள 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெய்ன்களே இதிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

46
மாருதி ஃபிரான்க்ஸ் ஹைப்ரிட்

ஃபிரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை நிறுவனம் நீண்ட நாட்களாக சோதனை செய்து வருகிறது. இதன் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் சிறிய மாற்றங்கள் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நிறுவனத்தின் சொந்த ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வரும் முதல் மாடல் ஃபிரான்க்ஸாகத்தான் இருக்கும் என்பது இதன் சிறப்பு.

56
மாருதி Y43

உற்பத்தி நிறுத்தப்பட்ட இக்னிஸ் ஹேட்ச்பேக் காருக்கு பதிலாக, Y43 என்ற குறியீட்டுப் பெயரில் ஒரு புதிய மைக்ரோ எஸ்யூவியை மாருதி உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாகனம் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் என பல்வேறு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

66
புதிய தலைமுறை மாருதி பிரெஸ்ஸா

பிரெஸ்ஸாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை 2026 ஜூலை 23-ம் தேதி அறிமுகப்படுத்த மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. அதே சமயம், முற்றிலும் புதிய தலைமுறை பிரெஸ்ஸா 2029-ல் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய தலைமுறை மாடலில் மாருதியின் புதிய சீரிஸ் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் இடம்பெறும் என கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories