Bike Maintenance Tips: பைக் கழுவும்போது இந்த தவறு மட்டும் செய்யாதீங்க! ஆயுளைக் குறைக்கும் எச்சரிக்கை!

Published : Jul 16, 2026, 09:53 AM IST

Bike Maintenance Tips: நாம் ஆசையாக வாங்கும் பைக்கை அடிக்கடி சுத்தம் செய்தால் தான் நீண்ட நாள் ஓடும். இந்த செய்தியில் பைக்கை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? பைக்கை சுத்தம் செய்யும்போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன? என்பது குறித்து பார்ப்போம்.

PREV
14
பைக் பராமரிப்பு டிப்ஸ் - Bike Maintenance Tips

நீங்கள் ஆசையாக வாங்கிய பைக், சில மாதங்களிலேயே பொலிவிழந்து பழையது போலத் தோற்றமளிக்கிறதா? இதற்கு முக்கியக் காரணம், நாம் பைக்கை சுத்தம் செய்யும் முறையில் செய்யும் சில தவறுகள்தான். தினசரி பயன்பாட்டில் படியும் தூசி, சேறு மற்றும் எண்ணெய் பிசுக்குகளை முறையாக அகற்றாவிட்டால், பைக்கின் பெயிண்ட் மங்கி, துருப்பிடிக்க ஆரம்பித்துவிடும்.

பலரும் செய்யும் முதல் தவறு, பாத்திரம் கழுவும் சோப் அல்லது துணி துவைக்கும் டிடர்ஜென்ட் பவுடரை வைத்து பைக்கைக் கழுவுவதுதான். இந்த ரசாயனங்கள் பெயிண்ட்டின் மீதுள்ள பாதுகாப்புப் படலத்தை அரித்து, நாளடைவில் பெயிண்ட்டை மங்கச் செய்துவிடும். எனவே, எப்போதும் பைக்குகளுக்கென விற்கப்படும் பிரத்யேக ஷாம்புவை மட்டுமே பயன்படுத்துவது அவசியம்.

24
சரியான முறையில் பைக் சுத்தம் செய்வது எப்படி?

பைக்கை எப்போதும் நிழலான இடத்தில் நிறுத்தி, இன்ஜின் சூடு ஆறிய பிறகு கழுவத் தொடங்குங்கள். நேரடியாக பைக்கின் மீது அதிக அழுத்தத்தில் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, இன்ஜின், எலக்ட்ரிக்கல் வயரிங், பேட்டரி மற்றும் மீட்டர் கன்சோல் பகுதிகளில் தண்ணீர் வேகமாகப் பட்டால் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது. பைக் ஷாம்புவை தண்ணீரில் கலந்து, மென்மையான ஸ்பாஞ்ச் அல்லது மைக்ரோஃபைபர் துணியைக்கொண்டு பைக்கை மெதுவாகத் தேய்த்துக் கழுவ வேண்டும்.

கடினமான பிரஷ்களைப் பயன்படுத்தினால், பெயிண்ட்டில் கீறல்கள் விழும். கழுவி முடித்ததும், சுத்தமான தண்ணீரால் பைக்கை முழுமையாக அலசி, ஈரமில்லாத மென் துணியால் உடனடியாகத் துடைத்துவிட வேண்டும். தினமும் பைக்கைக் கழுவ வேண்டிய அவசியமில்லை. மென்மையான துணியால் தூசியைத் தட்டிவிட்டாலே போதும். மழையில் நனைந்தால் மட்டும், உடனடியாக ஈரத்தைத் துடைத்துவிடுவது துருப்பிடிப்பதைத் தடுக்கும்.

34
பைக்கின் இந்த பாகங்களில் கூடுதல் கவனம்

பைக்கின் செயினை அவ்வப்போது சுத்தம் செய்து, பிரத்யேக செயின் லூப் பயன்படுத்துவது அதன் ஆயுளை அதிகரிக்கும். இது சத்தத்தைக் குறைத்து, வண்டியின் செயல்திறனை மேம்படுத்தும். அதேபோல, பிரேக் டிஸ்க் மற்றும் டயர்களில் பாலிஷ் அல்லது எண்ணெய் படாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். இல்லையெனில் பிரேக் பிடிக்கும் திறன் பாதிக்கப்படும். பைக்கை முழுமையாகச் சுத்தம் செய்த பிறகு, தரமான வேக்ஸ் பாலிஷ் பயன்படுத்துவது நல்லது. இது பைக்கிற்குப் பளபளப்பைக் கொடுப்பதுடன், தூசி மற்றும் தண்ணீர் எளிதில் ஒட்டாமல் ஒரு பாதுகாப்பு கவசமாகச் செயல்படும். ஆனால், சீட், ஹேண்டில் பார் மற்றும் பிரேக் பகுதிகளில் பாலிஷ் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

பைக் கழுவும்போது செய்யவே கூடாதவை

இன்ஜின் சூடாக இருக்கும்போது தண்ணீர் ஊற்றுவது, வெயிலில் பைக்கை நிறுத்தி ஷாம்பு போட்டு கழுவுவது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். டீசல், பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் கொண்டு பெயிண்ட் உள்ள பகுதிகளைத் துடைக்கக் கூடாது. இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்கள் பைக் பல ஆண்டுகள் கடந்தாலும் ஷோரூம் பொலிவுடன் ஜொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

44
சைலன்சர், எலக்ட்ரானிக் சென்சார்களில் கவனம்

நவீன பைக்குகளில் குறிப்பாக BS6 மாடல்களில் பல வகையான எலக்ட்ரானிக் சென்சார்கள் மற்றும் கம்ப்யூட்டர் சிஸ்டம்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பைக்கை வாட்டர் வாஷ் செய்யும்போது, சைலன்சரின் துளைக்குள் நேரடியாகத் தண்ணீர் புகாதவாறு ஒரு துணியையோ அல்லது பிரத்யேக சைலன்சர் கேப்பையோ கொண்டு மூடுவது அவசியமாகும். சைலன்சருக்குள் தண்ணீர் சென்றால் அது இன்ஜின் பாதிப்பிற்கு வழிவகுக்கும். அதேபோல, ஸ்பார்க் பிளக் மற்றும் ஒயரிங் ஜாயிண்ட்டுகள் இருக்கும் பகுதிகளில் தண்ணீரைத் தேங்கவிடக் கூடாது.

Read more Photos on
click me!

Recommended Stories