Car Offers: ரூ.2.15 லட்சம் வரை சேமிக்கலாம்.. ஹோண்டா எலிவேட், அமேஸ், சிட்டி மீது ஜூலை சலுகைகள்

Published : Jul 15, 2026, 08:47 AM IST

Car Offers: ஜூலை 2026-ல் புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஹோண்டா இந்தியா சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்ட்டி சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

PREV
14
ஜூலை கார் ஆஃபர்

இந்த மாதம் ஹோண்டாவின் எலிவேட் எஸ்யூவிக்கு தான் மிகப்பெரிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.2.15 லட்சம் வரை மொத்த பலன்களைப் பெறலாம். இதில் ரூ.40,000 வரை ரொக்க தள்ளுபடி, ரூ.30,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி மற்றும் கார்ப்பரேட் நன்மைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், 7 ஆண்டு நீடிக்கப்பட்ட வாரண்டியும் சலுகை விலையில் வழங்கப்படுகிறது. ஹோண்டா எலிவேட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.60 லட்சம் முதல் ரூ.16.16 லட்சம் வரை உள்ளது.

24
ஹோண்டா அமேஸ் சலுகை

3வது தலைமுறை ஹோண்டா அமேஸ் மீது ரூ.67,000 வரை சலுகைகள் கிடைக்கின்றன. இதில் ரூ.15,000 ரொக்க தள்ளுபடி, ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் பெனிபிட் மற்றும் லாயல்டி பலன்கள் வழங்கப்படுகின்றன. மேலும், 2வது தலைமுறை அமேஸ்க்கு ரூ.58,000 வரை பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாடலின் விலை ரூ.6.98 லட்சம் முதல் ரூ.7.80 லட்சம் வரை உள்ளது.

27 கி.மீ மைலேஜ் முதல் சன்ரூஃப் வரை.. பட்ஜெட்டில் வாங்குபவர்களுக்கு இந்த 3 கார்கள் சூப்பர்

34
ஹோண்டா சிட்டிக்கும் ஆஃபர்

சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட ஹோண்டா சிட்டி பேஸ்லிப்ட் மீது ரூ.35,000 வரை பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12 லட்சம் முதல் ரூ.21 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

44
வாங்கும் முன் கவனிக்க வேண்டியது

இந்த சலுகைகள் ஜூலை 2026 மாதத்திற்கானவை. ஒவ்வொரு டீலர்ஷிப்பிலும் சலுகைகள் மாறுபடலாம். கார்ப்பரேட் ஆஃபர் அல்லது லாயல்டி பெனிபிட் போன்றவை குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடும். எனவே, இறுதி விலை மற்றும் சலுகைகளை ஹோண்டா அங்கீகரிக்கப்பட்ட ஷோரூமில் உறுதிப்படுத்துவது நல்லது.

ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி.. 20 கிமீ மைலேஜ், 6 ஏர்பேக் உடன் வரும் கார் வாங்க ஆஃபர் அறிவிப்பு

Read more Photos on
click me!

Recommended Stories