Car Sales : கிரிட்டா, பஞ்ச் எல்லாம் ஓரம்போ... ஏப்ரலில் அதிகம் விற்பனையான கார் எது? டாப் 10 லிஸ்ட் இதோ

Published : May 07, 2026, 12:42 PM IST

April Car Sales Report : ஏப்ரல் மாத கார் விற்பனை ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. ஹூண்டாய், கியா, ரெனால்ட் போன்ற நிறுவனங்களும் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளன.

PREV
14
April Car Sales Report

ஏப்ரல் மாதத்துக்கான வாகன விற்பனை அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது. பெரும்பாலான கார் நிறுவனங்கள் ஆண்டு அடிப்படையில் நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. மாருதி சுஸுகி நிறுவனம் 1,87,794 யூனிட்களை விற்று, விற்பனைப் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர உள்நாட்டு விற்பனையாகும். இந்நிறுவனம் 35% ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. காம்பாக்ட் மற்றும் மிட்-சைஸ் பிரிவில் இருந்து 80,659 யூனிட்களும், சிறிய கார்கள் பிரிவில் இருந்து 16,066 யூனிட்களும் விற்பனையாகி உள்ளன. இம்மாதமும் அதிக விற்பனையான கார்கள் பட்டியலில் மாருதி டிசையர் தான் முதலிடத்தில் உள்ளது. அந்த கார் 23,580 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.

24
சரிவை சந்தித்த மஹிந்திரா

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த முறை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனம் ஆண்டு அடிப்படையில் 30.5% வளர்ச்சியை எட்டியுள்ளது. டாடா நெக்ஸான் மற்றும் பஞ்ச் ஆகியவை அதிகம் விற்பனையான மாடல்களாக உள்ளன.

மஹிந்திரா நிறுவனம், ஏப்ரல் 2026-ல் 56,331 யூனிட்களை விற்பனை செய்து, இந்தியாவின் மூன்றாவது பெரிய கார் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது. இந்நிறுவனம் 8% ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், மாத விற்பனை 6.5% குறைந்துள்ளது. இந்நிறுவனத்தில் அதிகம் விற்பனையான கார் என்றால் அது தார் தான். வரும் மாதங்களில், மஹிந்திரா ஸ்கார்பியோ N, ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் தார் 3-டோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது. இது விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

34
வளர்ச்சி கண்ட ஹூண்டாய்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா, ஏப்ரல் 2026-ல் மொத்தம் 51,902 யூனிட்களை உள்நாட்டில் விற்பனை செய்து நான்காவது இடத்தில் உள்ளது. இது 17% ஆண்டு வளர்ச்சியாகும். ஹூண்டாய் வென்யூ மாடல் 12,420 யூனிட்கள் விற்பனையாகி, அதன் அதிகபட்ச மாதாந்திர விற்பனையை பதிவு செய்துள்ளது. இது ஹூண்டாயின் மொத்த விற்பனைக்கு முக்கிய பங்களித்துள்ளது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்த முறை 30,159 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2025 ஏப்ரலில் 24,833 யூனிட்களை விற்றிருந்த நிலையில், இது 21% ஆண்டு வளர்ச்சியாகும். கியா இந்தியா நிறுவனம் 27,286 யூனிட்களை விற்பனை செய்து ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் அதிகபட்ச ஏப்ரல் மாத விற்பனையாகும். செல்டோஸ் மற்றும் சோனெட் மாடல்கள் இந்த மாதம் 10,000 யூனிட்களுக்கு மேல் விற்பனையானதாக கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

44
ரெனால்ட் நிலவரம் என்ன?

JSW MG மோட்டார் மற்றும் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனங்கள் முறையே 6,018 மற்றும் 4,069 யூனிட்களை விற்பனை செய்து, ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களைப் பிடித்துள்ளன. MG நிறுவனம் ஆண்டு அடிப்படையில் 3% சிறிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதே சமயம், ஹோண்டா நிறுவனம் 21% வலுவான ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ரெனால்ட் நிறுவனத்திற்கு ஏப்ரல் 2026 லாபகரமான மாதமாக அமைந்தது. இந்நிறுவனம் மொத்தம் 5,413 யூனிட்களை விற்பனை செய்து, ஆண்டு அடிப்படையில் 108% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்டர் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. நிசான் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 2026-ல் 3,203 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது 45.5% ஆண்டு வளர்ச்சியாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories