வெளிப்புற வடிவமைப்பில் XUV 7XO-க்கு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டீசர் தகவல்களின் அடிப்படையில், புதிய டூயல்-பேட் LED ஹெட்லெம்ப்கள், தலைகீழ் L-வடிவ LED DRL-கள், பிளாக்-அவுட் கிரில் மற்றும் புதிய அலாய் வீல்கள் வழங்கப்படும். பின்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட LED டெயில்லேம்ப்கள் இடம் பெறுகின்றன. இந்த டிசைன், XUV700-ஐ விட அதிகமாக மாடர்ன் தோற்றத்தை வழங்கும் வகையில் உள்ளது.
உட்புறத்தில், XUV 7XO ஒரு பிரீமியம் அப்டேட்டை பெறுகிறது. புதிய டாஷ்போர்டு, XEV 9S-ஐ ஒத்த டிரிபிள் ஸ்கிரீன் செட்டப், சாஃப்ட்-டச் மெட்டீரியல்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஈசி வென்ட்கள் வழங்கப்பட உள்ளன. இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் பெட்ரோல், டீசல் என இரு எரிபொருள் தேர்வுகளுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கும். சக்தி, வசதி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்த எஸ்யூவி தனது பிரிவில் கடும் போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.