டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிசம்பர் 2025 மாதத்திற்கான ஆண்டு இறுதி சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர்கள் டியாகோ, ஆல்ட்ரோஸ், நெக்சான், ஹேரியர் மற்றும் சஃபாரி போன்ற கார்களுக்கு டிசம்பர் 31 வரை பொருந்தும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிசம்பர் 2025 மாதத்திற்கான ஆண்டு இறுதி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சலுகைகள் MY24 மற்றும் MY25 மாடல் கார்களுக்கு பொருந்தும் வகையில், டிசம்பர் 1 முதல் 31 வரை நாடு முழுவதும் வழங்கப்படுகின்றன. ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி என டாடா பேஸஞ்சர் வாகனங்களின் பெரும்பாலான மாடல்களுக்கு நுகர்வோர் சலுகை, எக்சேஞ்ச் போனஸ், லாயல்டி மற்றும் கார்ப்பரேட் பலன்கள் சேர்த்து இந்த ஆஃபர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
25
டாடா கார் தள்ளுபடி 2025
MY24 மாடல்களில், டியாகோக்கு மொத்தம் ரூ.55,000 வரை பலன் வழங்கப்படுகிறது. டிகோர் காருக்கும் இதே அளவு சலுகை கிடைக்கிறது. ஆல்ட்ரோஸ் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு (ரேசர் தவிர) ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ட்ரோஸ் ரேசர் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.1.85 லட்சம் வரை பலன் கிடைக்கும். பஞ்ச் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாடல்களுக்கு ரூ.75,000, நெக்சான் அனைத்து எரிபொருள் வகைகளுக்கும் ரூ.50,000 வரை சலுகை வழங்கப்படுகிறது.
35
டாடா கார் எக்சேஞ்ச் போனஸ்
ஹேரியர் மற்றும் சஃபாரி டீசல் மாடல்களுக்கு தலா ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி உள்ளது. கர்வ் (Curvv) MY24 மாடலுக்கு ரூ.50,000 நேரடி பலன் வழங்கப்படுகிறது. MY25 மாடல்களில், டியாகோ (XE தவிர) மற்றும் டிகோர் கார்களுக்கு ரூ.35,000 வரை பலன் கிடைக்கும். டியாகோ XE டிரிமுக்கு இந்த மாதம் எந்த சலுகையும் இல்லை. அவுட் கோயிங் ஆல்ட்ரோஸ் மாடல்களுக்கு ரூ.85,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. புதிய தலைமுறை ஆல்ட்ரோஸ் கார்களுக்கு ரூ.25,000 வரை மட்டுமே பலன் உள்ளது.
பஞ்ச் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாடல்களுக்கு லாயல்டி சேர்த்து ரூ.50,000 கிடைக்கிறது. நெக்சான் MY25 மாடல்களில், ஸ்மார்ட் மற்றும் ப்யூர் டிரிம்களுக்கு ரூ.65,000 வரை சலுகை வழங்கப்படுகிறது. மற்ற டிரிம்களுக்கு ரூ.50,000 வரை பலன் கிடைக்கும். டீசல் நெக்சானுக்கும் ரூ.50,000 தள்ளுபடி உள்ளது. கர்வ் MY25 மாடலுக்கு ரூ.40,000, ஹேரியர் மற்றும் சஃபாரி MY25 மாடல்களுக்கு தலா ரூ.75,000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
55
டாடா கார்களுக்கு சூப்பர் டீல்ஸ்
கார்ப்பரேட், அலையன்ஸ், SBI YONO, Tata Group ஊழியர்கள் மற்றும் ரெஃபரல் திட்டங்கள் மூலம் கூடுதல் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக SBI YONO வழியாக முன்பதிவு செய்தால், ஆல்ட்ரோஸ், ஹேரியர், சஃபாரி மாடல்களுக்கு கூடுதல் பணச் சலுகை கிடைக்கும். இந்த ஆண்டு இறுதி சலுகைகள், புதிய கார் வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் மாதத்தை சிறந்த வாய்ப்பாக மாற்றியுள்ளது.