ஹூண்டாய்-டாடாவை தூக்கி எறிந்த மஹிந்திரா! டிசம்பர் விற்பனை மாஸ்!

Published : Jan 14, 2026, 03:48 PM IST

2025 டிசம்பரில், மஹிந்திரா 50,946 வாகனங்களை விற்று 23% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஸ்கார்பியோ, பொலேரோ போன்ற SUV மாடல்கள் மற்றும் புதிய EV மாடல்களின் வலுவான செயல்திறன் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

PREV
13
ஹூண்டாய் டாடாவை முந்திய மஹிந்திரா

2025 டிசம்பர் மாதத்தில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மொத்தம் 50,946 வாகனங்களை விற்பனை செய்து கவனம் ஈர்த்துள்ளது. இது 2024 டிசம்பரில் பதிவான 41,424 யூனிட்கள் விற்பனையை விட 23% அதிகம். இந்த முன்னேற்றத்தின் மூலம் டிசம்பர் மாத கார் விற்பனையில் மாருதி சுசுகிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது மஹிந்திரா பிடித்துள்ளது. நீண்ட காலமாக போட்டியாளர்களாக இருந்த ஹூண்டாய், டாடா நிறுவனங்களை முந்தி முன்னேறுவதற்கு, மஹிந்திராவின் சக்திவாய்ந்த SUV வரிசை மற்றும் வளர்ந்து வரும் EV மாடல்கள் காரணமாக உள்ளன.

23
மஹிந்திரா விற்பனை

விற்பனையில் முன்னிலை பெற்ற மாடல்களாக ஸ்கார்பியோ + ஸ்கார்பியோ N தொடர்ந்து அசத்தி, 15,885 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 30% வளர்ச்சி என தெரிவிக்கப்படுகிறது. கிராமப்புறம் மற்றும் சிறுநகர சந்தைகளில் தேவை அதிகரித்ததால் பொலேரோ 10,611 யூனிட்கள் விற்பனையாகி, 79% உயர்வை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதோடு XUV 3XO 9,422 யூனிட்கள் விற்பனையாக, தார் + தார் ROXX சேர்த்து 9,339 யூனிட்கள் விற்பனையாகி 22% ஆண்டு வளர்ச்சியும் கண்டுள்ளது.

33
23% வளர்ச்சி

EV பிரிவிலும் மஹிந்திரா புதிய வேகம் காட்டுகிறது. XEV 9e 2,154, BE 6 1,481 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. புதிய மாடலான XEV 9s 491 யூனிட்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் XUV700 விற்பனை 1,424 யூனிட்கள் என குறைந்ததால், விரைவில் வரவிருக்கும் புதிய மாடல் டெலிவரிகள் காரணமாக இருக்கலாம். நவம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால் டிசம்பரில் விற்பனை சற்று குறைந்தாலும், 2025 ஆண்டு முடிவில் மஹிந்திரா வலுவான வளர்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories