153KM வருதுன்னு பேசுறாங்க.. Chetak EV-க்கு ஹப் மோட்டாரா? இதுக்கு முன்னாடி இப்படிலாம் இல்ல

Published : Jan 14, 2026, 02:40 PM IST

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய தலைமுறை சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய மாடல் புதிய டிஸ்ப்ளே, ஹப்-மவுண்டட் மோட்டார் போன்ற பல மாற்றங்களுடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
14

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய தலைமுறை சேடக் இவி (Chetak EV) மாடலை விரைவில் அறிமுகப்படுத்தும் பணிகளில் தீவிரமாக உள்ளது. இந்த ஸ்கூட்டர் தொடர்ந்து சாலை சோதனைகளில் இருந்து வரும் நிலையில், விரைவில் லாஞ்ச் ஆகலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தற்போதைய சேடக் மாடலை விட, இந்த புதிய வேரியண்டில் வடிவமைப்பு மற்றும் அம்சங்களில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24

ஸ்பை படங்களில் தெரியும் முக்கியமான அப்டேட்டாக, முன்புறத்தில் LED ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் “Chetak” என்ற எழுத்து அழகாக இணைக்கப்பட்டுள்ளது. இப்போது வரை முன்பக்க ஏப்ரனில் இருந்த இன்டிகேட்டர்கள், புதிய மாடலில் ஹேண்டில்பார் அருகே மாறியதாக தெரிகிறது. பக்கப்பகுதி பேனல்கள் முழுவதும் மறைக்கப்பட்டு இருந்தாலும், புதிய கிராபிக்ஸ், நிறங்கள் மற்றும் சிறிய ஸ்டைலிங் மேம்பாடுகள் இடம்பெறும் வாய்ப்பு அதிகம்.

34

பின்புறம் புதிய தோற்றத்துடன் இருந்தாலும், சேடக்கின் அடையாளமான கிளாசிக் லுக் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டுள்ளது. இதில் பிரேக் லைட் மற்றும் LED டர்ன் இன்டிகேட்டர்கள் கொண்ட ஒற்றை டெயில்லைட் யூனிட் உள்ளது. நம்பர் பிளேட் ஹோல்டர் புதிதாக இருப்பதோடு, பின்புற டயர் ஹக்கரும் சேர்க்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனாக டெலஸ்கோபிக் ஃப்ரண்ட் ஃபோர்க் மற்றும் இரட்டை ரியர் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படலாம். மேலும், செவ்வக வடிவ LCD டிஸ்ப்ளே மற்றும் புதிய சுவிட்ச் கியரும் கவனம் பெறுகிறது.

44

மெக்கானிக்கல் மாற்றத்தில் முக்கியமாக, புதிய சேடக்கில் ஹப்-மவுண்டட் மோட்டார் வரலாம். தற்போதைய மாடலில் இருக்கும் ஸ்விங் ஆர்ம் மோட்டாரை விட இது டைரக்ட் டிரைவ் அனுபவத்தை வழங்குகிறது. பேட்டரியாக 3kWh அல்லது 3.5kWh பேக் தொடர்ந்தால், ரேஞ்ச் முறையே 127 கிமீ மற்றும் 153 கிமீ வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாஞ்ச் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த ஆண்டு விற்பனைக்கு வர வாய்ப்பு உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories