7 சீட்டர் கார் பிரிவில் புதிய கியா காரென்ஸ் கிளாவிஸ் அறிமுகமாகியுள்ளது. அதன் மைலேஜ் விவரங்களும் வெளியாகியுள்ளன. பெட்ரோல், டீசல் மாடல்களின் ARAI சான்றளிக்கப்பட்ட மைலேஜ் விவரங்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மூன்று எஞ்சின் விருப்பங்களில் கிளாவிஸ் கிடைக்கிறது. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் லிட்டருக்கு 15.95 கி.மீ. மைலேஜும், 7-ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷனுடன் 16.66 கி.மீ. மைலேஜும் தருகிறது. இந்த எஞ்சின் 160 bhp பவரையும் 253 Nm டார்க்கையும் உருவாக்குகிறது.