21 நாட்கள் பேட்டரி லைஃப்… AMOLED டிஸ்ப்ளே உடன் வரும் Huawei GT6 Pro - ஃபிட்னஸ் லவர்ஸ்க்கு சரியான வாட்ச்!

Published : Nov 25, 2025, 11:02 AM IST

சீன நிறுவனமான Huawei, தனது புதிய GT6 மற்றும் GT6 Pro ஸ்மார்ட்வாட்ச் சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 21 நாட்கள் பேட்டரி ஆயுள், AMOLED டிஸ்ப்ளே, 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகள் போன்ற அம்சங்களுடன் இந்த வாட்ச்கள் வந்துள்ளன.

PREV
13
ஹவாய் ஜிடி6 சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

சீன நிறுவனமான Huawei இந்தியாவில் தனது புதிய GT6 ஸ்மார்ட்வாட்ச் சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இரண்டு மாடல்கள் உள்ளன. ஹவாய் ஜிடி6 மற்றும் ஹவாய் ஜிடி6 ப்ரோ. இந்த இரு ஸ்மார்ட் வாட்ச்களும் 21 நாட்கள் வரை பேட்டரி சக்தி, AMOLED டிஸ்ப்ளே, 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ், மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகள் போன்ற தொழில்நுட்ப வசதிகளுடன் வந்துள்ளன. Android மற்றும் iOS இரண்டிலும் இவை பயன்படுத்த முடியும். Flipkart மற்றும் RTC India இணையதளத்தில் இந்த வாட்ச்கள் கிடைக்கும்.

23
ஹவாய் ஜிடி6 Pro – பிரீமியம் மாடல்

இந்த தொடரின் மிக உயர்ந்த மாடல் GT6 Pro. இது Titanium Alloy Body, Sapphire Glass பாதுகாப்பு கொண்டதால் நீண்ட காலம் பயன்படுத்தலாம். அதிகபட்சமாக 3000 nits பிரகாசமான AMOLED காட்சி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புதிய சூரியகாந்தி ஜிபிஎஸ் சிஸ்டம் உள்ளது, இது ஓட்டம், சைக்கிளிங் அல்லது மலைப் பாதை தடங்களில் பயிற்சி செய்வோருக்கு மிகவும் துல்லியமான டிராக்கிங்கை வழங்குகிறது. 100+ ஸ்போர்ட்ஸ் மோடுகள், 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ், மேம்பட்ட தூக்க கண்காணிப்பு (ஸ்லீப் டிராக்கிங்), சைக்கிளிங் பவர் மெட்ரிக்ஸ் போன்ற பல வசதிகள் இதில் உள்ளன.

33
ஹவாய் ஜிடி6 – விலை மற்றும் வெர்சன்கள்

GT6 Pro-வின் முக்கிய அம்சங்கள் இலகுரக வடிவில் வழங்கும் மாடல் ஹவாய் ஜிடி6. இது தினசரி பயன்படுத்தும் பயனர்களுக்கு ஏற்றது. இதில் AMOLED டிஸ்ப்ளே, 100+ விலையாட்டு முறைகள், சைக்கிள் ஓட்டும் சக்தி அளவீடுகள், மற்றும் முழுமையான தூக்க பகுப்பாய்வு உள்ளது. ஆழ்ந்த உறக்கம், REM நிலை, மீட்பு வரை விவரங்கள் வரும் இந்த வாட்ச் 21 நாட்கள் பேட்டரி ஆயுள் வழங்குவதால் சார்ஜிங் பற்றிய கவலை குறையும். Huawei இந்த சீரிஸை பல நிறங்களில் மற்றும் வெர்சன்களில் கொண்டு வந்துள்ளது. GT6 Pro விலை ரூ.28,999 முதல் தொடங்குகிறது. டைட்டானியம் பதிப்பு ரூ.39,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹவாய் ஜிடி6 இரண்டு அளவுகளில் (46mm & 41mm) கிடைத்து ரூ.21,999 முதல் தொடங்குகிறது. Gold Edition மாடல் ரூ.24,999க்கு கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories