ஜப்பான் வாகன தயாரிப்பாளரான ஹோண்டா கார்ஸ் இந்தியா, டிசம்பர் மாதம் சிறப்பு தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த பிரபலமான SUV மாடலான ஹோண்டா எலிவேட் வாங்குபவர்கள் இந்த மாதத்தில் ரூ.1.76 லட்சம் வரை நன்மைகள் பெறலாம். ஆண்டின் மிகப்பெரிய தள்ளுபடி இதுவாகக் கருதப்படுகிறது.
இதில் கிடைக்கும் ‘எலைட் பேக்’ மூலம் கூடுதல் செலவில்லாமல் 360° கேமரா, 7 நிற ஆம்பியன்ட் லைட் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. ஹோண்டா எலிவெட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.99 லட்சத்தில் துவங்குகிறது, மேலும் இது மாருதி கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போன்ற மாடல்களுடன் போட்டியிடுகிறது.
அடிப்படை SV டிரிம் வேரியனில் டூயல் ஏர்பேக்குகள், 16” வீல்கள், LED புரொஜெக்டர் விளக்குகள், ஆட்டோ ஏசி, புஷ்-பட்டன் ஸ்டார்ட், பீஜ் உள் போன்ற வசதிகள் உள்ளன. அடுத்த V ட்ரிம் வேரியனில் 8” டச் ஸ்கிரீன், Android Auto & Apple CarPlay, கனெக்டட் கார் டெக், மல்டி-ஸ்டீயரிங் & ரியர் கேமரா ஆகியவை சேர்கின்றன. இங்கு வாடிக்கையாளர்கள் CVT டிரான்ஸ்மிஷன் தேர்வு செய்யலாம்.