ஹூண்டாய் தனது எக்ஸ்டர் மைக்ரோ SUV மீது டிசம்பர் 2025-க்கு சிறப்பு தள்ளுபடிகளை வழங்குகிறது. பிரீமியம் அம்சங்களான சன்ரூப், 6 ஏர்பேக்குகள் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனுடன் வரும் இந்த காரை குறைந்த விலையில் வாங்க இது ஒரு அருமையான வாய்ப்பு.
டிசம்பர் 2025-ஐ முன்னிட்டு ஹூண்டாய் இந்தியா தனது பிரபலமான மைக்ரோ SUV, Exter மீது பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. ரூ.6 லட்சத்தில் துவங்கும் விலையில் கிடைக்கும் இந்த எக்ஸ்டர், தனது வகையில் பிரீமியம் அம்சங்களுடன் வருவதால் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாதத்தில் SUV வாங்க திட்டமிட்டிருந்தால், இது ஒரு நல்ல வாய்ப்பு. வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே இந்த சலுகை நடைமுறையில் இருக்கும் என்பதால், அருகிலுள்ள ஹூண்டாய் ஷோரூமில் தொடர்பு கொண்டு சலுகையைப் பெறலாம் பெறலாம்.
24
எக்ஸ்டர் என்ஜின் மற்றும் மைலேஜ்
எக்ஸ்டரில் 1.2 லிட்டர் நச்சுரல் ஆசுபிரேட்டட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 83bhp பவர், 114Nm டார்க் உற்பத்தி செய்யும் திறன் உடையது. நகரப் பயணமோ, நெடுஞ்சாலையோ இரண்டிலும் நல்ல செயல்திறன் தரும் என்ஜின் என பயனர்கள் கூறுகின்றனர். இதன் சிறப்பு என்னவெனில், சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுவதால், கூடுதல் மைலேஜ் மற்றும் குறைந்த செலவில் பயணிக்க விரும்புவோருக்கு இது பயனளிக்கிறது.
34
பிரீமியம் அம்சங்கள்
Exter தனது செக்மெண்டில் 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட், Wireless Android Auto & Apple CarPlay, க்ரூஸ் கன்ட்ரோல், ஒரே பானல் சன்ரூப், 6 ஸ்டாண்டர்ட் ஏர்பேக்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ரிவர்ஸ் கேமரா போன்ற அம்சங்களுடன் வருகிறது. குறிப்பாக ஒரே பானல் சன்ரூப் இந்த விலையில் கிடைப்பது அவ்வளவு சாதாரணமில்லை என்பதாலேயே இதற்கு கூடுதல் வரவேற்பு இருக்கிறது.
ஹூண்டாய் எக்ஸ்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.68 லட்சத்திலிருந்து ரூ.9.61 லட்சம் வரை உள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்கள் காரணமாக டாடா பஞ்ச், சிட்ரோயன் சி3, மாருதி ஃப்ராங்க்ஸ் போன்ற மாடல்களுடன் நேரடி போட்டியில் உள்ளது. தள்ளுபடி விவரங்கள் பகுதிகளுக்கு ஏற்ப மாறக்கூடியதால், அருகிலுள்ள டீலரிடம் சலுகைகளை நேரடியாக விசாரிப்பது அவசியம்.