Honda Activa Electric Scooter
இந்தியாவில் இப்போது மின்சார வாகனங்கள்தான் வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வாக உள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நீங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் சிரமப்படுகிறீர்கள் என்றால், புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றின் வெளியீட்டிற்கு இன்னும் கொஞ்சம் காத்திருங்கள். ஹோண்டாவின் ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக உள்ளது.
Honda Activa EV
வரவிருக்கும் ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த ஸ்கூட்டரின் ரேஞ்ச் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
Honda Activa Electric
ஹோண்டாவின் ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிய தலைமுறையினரின் விரும்பும் வாகனமாக இருக்கும். குறிப்பாக, இளம் பெண்கள் வாங்க விரும்பும் முதல் தேர்வாக இருக்கும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் போன்ற அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் இடம்பெறும் எனத் தெரிகிறது.
2025 Honda Activa Electric
இதனுடன், ட்ரிப் மீட்டர், மொபைல் சார்ஜிங் போர்ட் மற்றும் ப்ளூடூத் இணைப்பு போன்ற அம்சங்களுடன் மியூசிக் கண்ட்ரோல் சிஸ்டமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், மின்சார ஸ்கூட்டரின் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் இருக்கலாம். 3.2 kW பேட்டரி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 3 மணிநேரம் தான் என்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை பயணிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Honda Activa Electric Scooter Price in India
ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹோண்டா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்கூட்டர் சுமார் 1.20 லட்சத்தில் சந்தைக்கு வரும் என்று பல்வேறு கணிப்புகள் சொல்கின்றன. ஆனால், ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை குறித்து ஹோண்டா நிறுவனம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால், அறிமுகச் சலுகையாக EMI ஆப்ஷன்கள் இருக்கும்.
Honda Activa Electric Scooter launch date
ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீட்டுத் தேதியை இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால், மார்ச் 2025 இல் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று அறிய முடிகிறது. அதற்கு இன்னும் 6 மாதங்கள்தான் அவகாசம் உள்ளது. எனவே, சீக்கிரமே ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.