சரிவான சாலைகளில் கார் ஓட்டும்போது, பின்னோக்கிச் செல்லாமல் இருக்க, முதல் கியரைப் பயன்படுத்துவது, பெடல்களைச் சரியாகக் கையாளுவது மற்றும் நிலையான வேகத்தைப் பராமரிப்பது போன்ற சில எளிய நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும்.
கார் ஓட்டுவது பலரின் கனவு. ஆனால் புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கு சாலையின் நிலைமைகள் சற்று சிரமமாக இருக்கும். குறிப்பாக, சரிவான சாலைகளில் காரை மேலே கொண்டு செல்லும்போது, அது பின்னோக்கிச் சென்று விடுமோ என்ற பயம் அதிகம் இருக்கும். இந்த பயத்தை கடக்க, சில எளிய முறைகளை பின்பற்றினால், கார் ஒருபோதும் பின்நோக்கி நகராது. முதலில், கியர் தேர்வு மிக முக்கியம்.
24
சரிவான சாலையில் கார் ஓட்டுவது எப்படி?
சரிவில் காரை மேலே கொண்டு செல்லும்போது பலர் இரண்டாவது கியரை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது தவறு. சரியான நடைமுறை, எப்போதும் முதல் கியரில் காரை இயக்குவது. முதல் கியரில் அதிக டார்க் கிடைக்கும், அதனால் கார் எளிதில் முன்னோக்கிச் சென்று சரிவை ஏறிவிடும். அடுத்து, பெடல்களை சரியாகப் பயன்படுத்துவது அவசியம். புதிய ஓட்டுநர்கள் பலர் பிரேக்கை முதலில் விடுவார்கள், இதனால் கார் நியூட்ரலில் போய் பின்னோக்கிச் செல்லும் அபாயம் உள்ளது.
34
கிளட்ச், பிரேக், ஆக்சிலரேட்டர்
சரியான முறை என்னவென்றால், கியரை மாற்றிய பிறகு பிரேக்கை அழுத்தியபடி வைத்திருக்க வேண்டும். அதன் பின் கிளட்சை மெதுவாக விடும்போது கார் முன்னோக்கிச் செல்ல தயாராகும். அப்போதுதான் பிரேக்கை மெதுவாக விட வேண்டும். கார் வேகம் பெற்றவுடன் கிளட்சையும் முழுவதுமாக விட்டுவிட்டு ஆக்சிலரேட்டரை அழுத்தினால், கார் முன்நோக்கிச் செல்லும்.
அதுமட்டுமின்றி நிலையான வேகத்தை பராமரிப்பதும் முக்கியம். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்கள் சரிவில் தானாகவே கியரை மாற்றி மேலே செல்கின்றன. அப்போதெல்லாம் ஓட்டுநர் செய்ய வேண்டியது, ஆக்சிலரேட்டரை மெதுவாகக் கட்டுப்படுத்தி ஒரே மாதிரியான வேகத்தை வைத்திருப்பதே. இது காரை பின்னோக்கிச் செல்லாமல் பாதுகாப்பாக மேலே கொண்டு செல்ல உதவும்.