2026 ஜனவரி 1 முதல் ஆட்டோமொபைல் துறையில் மூன்று முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இதனால் 2026-ல் வாகன வாங்குபவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
2025 ஆண்டு நிறைவடைந்து தற்போது புதிய ஆண்டு 2026 தொடங்கிவிட்டது. இன்று முதல் ஆட்டோமொபைல் துறையில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் வாகனங்கள் விலை குறைந்து விற்பனை சாதனைகள் நிகழ்ந்தன. ஆனால் இன்று (ஜனவரி 1) முதல் சில புதிய விதிமுறைகள் மற்றும் விலை உயர்வுகள் வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கிறது.
25
இருசக்கர வாகனங்களுக்கு ஏபிஎஸ்
இதில் முதன்மையான மாற்றமாக, இருசக்கர வாகனங்களுக்கு ஏபிஎஸ் (ஏபிஎஸ்) கட்டாயமாகிறது. இரண்டாவது மாற்றமாக, பல கார் நிறுவனங்கள் தங்களது வாகனங்களின் விலையை உயர்த்துகின்றன. மூன்றாவது மாற்றமாக, கார்களைப் போலவே சில இருசக்கர வாகனங்களின் விலையும் அதிகரிக்க உள்ளது. ஜனவரி 2025-ல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் கட்டாயம் என அறிவித்தது.
35
இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள்
எஞ்சின் திறன் அல்லது வாகன வகை எதுவாக இருந்தாலும், ஸ்கூட்டர், பைக், மொபெட் என அனைத்தும் இந்த விதிக்குள் வரும். இருப்பினும், இந்த விதியை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் ஜிஎஸ்டி குறைப்பு மூலம் கிடைக்கும் பயன் பாதிக்கப்படும் என்றும், வாகன தேவை குறையலாம் என்றும் அவர்கள் பதிவு செய்கிறார்கள்.
புதிய ஆண்டுடன் சேர்ந்து கார் விலைகளிலும் உயர்வு உள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் நாணய மாற்றச் செலவுகள் காரணமாக இந்த உயர்வு செய்யப்படுகிறது. மெர்சிடீஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ, பிவாய்டி, எம்ஜி, நிசான், ஹோண்டா, ரெனால்ட் போன்ற நிறுவனங்கள் 2 முதல் 3 சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளன.
55
பைக் விலை உயர்வு
மேலும், சில இருசக்கர வாகனங்களின் விலையும் உயர்கிறது. உற்பத்திச்செலவு அதிகரிப்பு காரணமாகக் காட்டி, ஏப்ரிலியா, ஏதர், ட்ரையம்ப் போன்ற நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ளன. வரும் நாட்களில் மற்ற பிரபல பைக் நிறுவனங்களும் அத்தகைய அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2026 தொடக்கம் வாகனம் வாங்குவோருக்கு செலவு அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.