குளிர்காலத்தில் மூடுபனியால் பார்வை குறைந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேகத்தைக் குறைத்து, லோ-பீம் ஹெட்லைட்களைப் பயன்படுத்தி, முன்னால் செல்லும் வாகனத்துடன் போதுமான இடைவெளி விட்டுச் செல்வது அவசியம்.
குளிர்காலத்தில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் காணப்படும் மூடுபனி, ஓட்டுநர்களுக்கு பெரிய சவாலாக மாறுகிறது. சாலையில் பார்வைத் திறன் திடீரென குறைவதால், முன்னால் செல்லும் வாகனம், வளைவுகள் அல்லது தடைகள் சரியான நேரத்தில் தெரியாமல் போகலாம். இதனால், ஒரு சிறிய கவனக்குறைவுக்கே கூட விபத்து ஏற்படும் அபாயம். ஆனால், சில அடிப்படை பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றினால், மூடுபனியிலும் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும். உங்களையும், மற்ற சாலை பயணிகளையும் பாதுகாக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் அவசியம்.
24
மூடுபனி வாகனத்தை ஓட்டுதல்
மூடுபனியில் வாகனம் ஓட்டும்போது முதன்மையாக கவனிக்க வேண்டியது வேக கட்டுப்பாடு. பார்வை குறைவாக இருக்கும் சூழலில், அதிக வேகம் விபத்துக்கான வாய்ப்பை பல மடங்கு உயர்த்தும். எனவே, வழக்கத்தை விட வேகத்தை குறைத்து, முன்னால் செல்லும் வாகனத்துடன் போதுமான இடைவெளியைப் பேணுங்கள். திடீரென பிரேக் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், இந்த இடைவெளி உங்களை பாதுகாக்கும். நெடுஞ்சாலைகளில் ஓவர்டெக் செய்வதைத் தவிர்த்து, பாதுகாப்பான லேனில் மெதுவாகச் செல்வது நல்லது.
34
வாகன பாதுகாப்பு
ஒளி அமைப்புகளின் சரியான பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. மூடுபனியில் லோ-பீம் ஹெட்லைட்கள் அல்லது ஃபாக் லைட்களை பயன்படுத்த வேண்டும். ஹை-பீம் லைட்கள் மூடுபனியில் பிரதிபலித்து, பார்வையை மேலும் மோசமாக்கும். வாகனம் இயக்குவதற்கு முன், ஹெட்லைட், டெயில் லைட், இன்டிகேட்டர்கள் அனைத்தும் சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதேபோல், கண்ணாடிகளில் பனி அல்லது ஈரம் படிவதைத் தவிர்க்க, விண்ட்ஸ்கிரீன் மற்றும் பக்கக் கண்ணாடிகளை சுத்தமாக வைத்திருங்கள்; வைப்பவர்கள் மற்றும் டிஃபாகர் சரியாக வேலை செய்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும்.
மூடுபனியில் கண்களை மட்டும் நம்பாமல், சாலை அடையாளங்கள் மற்றும் ஒலிகளையும் கவனியுங்கள். பிற வாகனங்களின் ஹாரன், சைரன் போன்ற ஒலிகள் அருகிலுள்ள அபாயங்களை உணர உதவும். பிரதிபலிக்கும் லென் மார்க்கிங், சிக்னல் பலகைகள் ஆகியவற்றை வழிகாட்டியாகக் கொண்டு ஓட்டுங்கள். பார்வை மிகக் குறைவாக இருந்தால், தேவையில்லாத பயணங்களைத் தவிர்ப்பதே சிறந்த தீர்வு. அவசரம் இல்லாமல், அமைதியாகவும் பொறுமையாகவும் வாகனம் ஓட்டினால், சற்று தாமதமானாலும் பாதுகாப்பாக இலக்கை அடைய முடியும் என்பதே முக்கியமான உண்மை ஆகும்.