இனி ரயில் நிலையங்களில் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்யலாம்! சூப்பர் அறிவிப்பு!

Published : Apr 22, 2025, 11:33 AM IST

சென்னை ரயில் நிலையங்களில் இனி உங்கள் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

PREV
14
இனி ரயில் நிலையங்களில் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்யலாம்! சூப்பர் அறிவிப்பு!

Facility to charge electric vehicles at railway stations: பெட்ரோல், டீசல் எரிபொருளின் விலை உச்சத்தில் இருப்பது மட்டுமின்றி இவை சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக பெட்ரோல், டீசலுக்கு பதிலாக மின்சாரம் மற்றும் சிஎன்ஜி மூலம் இயங்கும் வாகனங்களை இயக்கும்படி மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு கடுமையாக இருப்பதாலும், மின்சார வாகனங்கள் மலிவு விலையில் கிடைப்பதாலும் பலரும் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். 

24
Electric Vehilces Charging Points

மின்சார வாகனங்கள் அதிகரிப்பு 

அனைத்து கார் மற்றும் பைக் உற்பத்தி நிறுவனங்களும் மின்சார வாகனங்களை போட்டி போட்டு உற்பத்தி செய்து வரும் நிலையில், இந்த வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மின்சார வாகனங்களுக்கு எளிதில் சார்ஜிங் வசதி கிடைக்க தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 25 கி.மீ தூரத்துக்கும், நகரங்களில் ஒவ்வொரு 3 கி.மீ. தூரத்துக்கும் ஒரு சார்ஜிங் மையங்களை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

2025ல் அதிகளவில் மின்சார வாகனங்களை விற்பனை செய்து சாதனை; மாநிலங்கள் வாரியான லிஸ்ட்
 

34
Charging Points at Railway Stations

ரயில் நிலையங்களில் சார்ஜிங் மையம் 

கேரளாவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அதிக அளவு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் அதிக அளவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து  இருந்தது. இந்நிலையில், சென்னையில் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. சென்னை கடற்கரை வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் முதற்கட்டமாக மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

தெற்கு ரயில்வே முடிவு 

இந்த பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கபப்பட உள்ளன. சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில் மொத்தம் 14 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்கள் அனைத்திலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. 
 

44
EV Charging, Tamilnadu

பொதுமக்கள் கோரிக்கை 

இதனால் சென்னையில் வாகன ஓட்டிகள் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையத்தை தேடி ஓட வேண்டிய நிலை இல்லை. தங்கள் மின்சார கார் மற்றும் மின்சார பைக்குகளை ரயில் நிலையங்களிலேயே சார்ஜ் செய்து கொள்ளலாம். தெற்கு ரயில்வே வெறும் அறிவிப்போடு மட்டும் நின்று விடாமல் விரைவில் பணிகளை முடித்து மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கார் பிரியர்களுக்கு குட் நியூஸ்! விரைவில் வருகிறது New Renault Duster, Nissan SUV

Read more Photos on
click me!

Recommended Stories